உலகின் மிக சிறந்த அமைச்சர் "விஜயபாஸ்கர்"..! கொரோனா பயத்தை விட.. மக்கள் பணி தான் முக்கியம்..! 

நம்மை கொரோனா தாக்கி விடுமோ என நாம் அஞ்சும் அதே வேளையில் மக்களுக்காக ஓடோடி உழைத்து  வருகிறார் அமைச்சர் "விஜயபாஸ்கர்". காலையில் ஒரு இடத்திலும் ... மத்திய வேளையில் வேறு ஒரு இடத்திலும்.. மாலையில் நேரத்தில் அடுத்தடுத்து பல இடங்களுக்கு சென்று சோதனை செய்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் கொரோனோ வைரஸ் பெயரைகேட்டாலே நாம் நடுங்குகிறோம். யார் தும்மினாலும் இருமினாலும் நமக்கு வந்துவிடுமோ என்ற பயம் நம்மை பற்றிக்கொண்டு உள்ளது அல்லவா? என்னதான்அவர் ஒரு அமைச்சராக இருந்தாலும் அவருக்கும் உயிர் மீது பயம் இருக்காதா ? என்ற கேள்விக்கு விடை... அயராது உழைக்கும் அவரது பணிகளில் தெரிந்துகொள்ளலாம். 

கொரோனோ வைரஸ் பரவ வாய்ப்புள்ள விமானநிலையங்கள், பேரூந்து ரயில்நிலையங்கள், கொரோனோ உள்ளதா என பரிசோதனை நடைபெறும் மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம் என அனைத்து இடங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்கிறார். 

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருவதும், சந்தேகங்களுக்கு விடைஅளிப்பதுவுமாக தான் உள்ளார். அவ்வளவு ஏன் மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் தமிழகத்தை காப்பாற்றும் வேகத்தில் அமைச்சர் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மற்ற மாநில ஊடகங்களும் சுகாதாரதுறை அமைச்சர்  விஜயபாஸ்கர் குறித்து பெருந்தன்மையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு படி மேலே சென்றால் கொரோனா வந்த பிறகு...உலக அளவில் இந்த அளவுக்கு  மிக சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் என்றால் அது விஜயபாஸ்கராகத்தான் இருக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் சார்பாக அவருக்கு நன்றிகள் கோடி.