தமிழகத்தில் இப்படியொரு ஆட்சி தான் நடக்கிறது.! அடித்துக்கூறும் ராஜேந்திர பாலாஜி..! 

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிக அற்புத நிகழ்வான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற உள்ளது. அந்த வகையில் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய இந்த வைபவம் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடக்க உள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்ற பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சத்திற்கும் மேலாக வருகை புரிகின்றனர். மேலும் நின்ற கோலத்தில் அத்திவரதரை காண பக்தர்கள் ஏராளமாக வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி 2500 பாதுகாவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அத்திவரதரை தரிசனம் கண்டு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது.... 

"காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.. அத்தி வரதரை தரிசனம் செய்து முடித்த பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தினமும் 2 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்... அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

Read more : கணவன் மனைவிக்குள் இந்த விஷயத்தில் சீன் போட்டா மன உளைச்சலில் சுத்த வேண்டியது தான்.. !

தமிழகத்தில் ஆன்மீகம் செழித்து வளர்ந்து வருகிறது... தெய்வம் தெய்வீகத்தை நம்பக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது.தண்ணீருக்குள் நூற்றாண்டுகள் கடந்தும் அத்திவரதர் சிலை அப்படியே உள்ளது" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்