கணவனை மனைவிக்குள் இருக்கும் தாம்பத்ய உறவில் எந்த வித விரிசலும் ஏற்படாதவாறு இருந்தாலே போதும். நிம்மதியான வாழ்க்கை  நடக்கும் என்றே சொல்லலாம். அதாவது, இது  மட்டும் வாழ்க்கை இல்லை என்றாலும், இதுவும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தான் உண்மை

கணவன் - மனைவிக்குள் இருக்கும் சில பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தாம்பத்ய விவகார்த்தில் வரும் பிரச்னையும் அடங்கும். அது குறித்து சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

தாம்பத்யத்தில் ஒருவருக்கு மட்டும் நாட்டம் இருந்து, துணைக்கு நாட்டம் இல்லாமல் இருந்தாலும்  உறவில் விரிசல் தான் ஏற்படும். எதையும் மனதார புரிந்துகொண்டு ஈடுபடுவது நல்லது

மேலும் தன் துணைக்காக மட்டும் தாம்பத்யத்தில் ஈடுபடுவதாக காண்பிக்க கூடாது. அப்படி என்றால் வெறுப்புணர்வை ஏற்படுத்தி விடும். தன் துணையின் விருப்பத்திற்கு ஏற்றவாறு  தாம்பத்ய உறவில் ஈடுபடுவது நல்லது. பிடிக்காத சில விஷயத்திற்கு காட்டாயப்படுத்தக்கூடாது. அது நெருடலை ஏற்படுத்தி விடும். 

Read more : அதிர்ச்சி செய்தி: தங்கம் விலை பயங்கர உயர்வு.! ஒரு சவரன வாங்க 30 ஆயிரம் இல்லாமல் முடியாது..!

அதே போன்று வேலைப்பளு, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது தாம்பத்யத்தில் ஈடுபட ஆர்வம் இருக்காது. இது போன்ற தருணத்தில் தன் துனை தன்னை தவறாக எடுத்துக்கொள்வார் என்பதற்காக ஈடுபட வேணடாம். நிலைமையை எடுத்து கூறினாலே புரிந்துகொள்வார்கள்.
எனவே இது போன்ற சில விஷயங்களில் சற்று கவனம் செலுத்தி, துணையின் மனதை புண்படுத்தாமல் இருந்தாலே இதனால் வரக்கூடிய சில மன சங்கடங்கள்  தவிர்க்கலாம்.