Asianet News TamilAsianet News Tamil

TNPSC விவகாரம்: ஆதாரத்தை எடுத்து நீட்டிய அமைச்சர் ஜெயக்குமார்! இதுக்கு எல் போர்டு உதயநிதி என்ன சொல்ல போறாரு...

தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய முதல்வர் எழுதிய விரிவான கடிதத்தையும் கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வேளாண் தொடர்பாக கோரிக்கையை பரிசீலித்து இன்னும் 4 நாட்களில் நல்ல முடிவை மத்திய எடுக்கும் என தெரிவித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

minister jayakumar open talk about stalin
Author
Chennai, First Published Feb 10, 2020, 6:09 PM IST

"நெட்வொர்க் அன்றே பண்ணிட்டாங்க"... இதுக்கு எல் போர்டு உதயநிதி என்ன சொல்ல போறாரு... தெறிக்கவிடும் அமைச்சர் ஜெயக்குமார்..! 

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற புதிய விதியை எதிர்த்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகரிடம் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். அதில் "தமிழகத்தில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தக் கூடாது" என முதல்வர் எழுதிய கடித்ததை வழங்கி உள்ளோம். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அறிவிப்பு

minister jayakumar open talk about stalin

இது தவிர, தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய முதல்வர் எழுதிய விரிவான கடிதத்தையும் கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வேளாண் தொடர்பாக கோரிக்கையை பரிசீலித்து இன்னும் 4 நாட்களில் நல்ல முடிவை மத்திய அரசு எடுக்கும் என தெரிவித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

minister jayakumar open talk about stalin

மேலும் கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மக்களை பாதிக்காத வகையில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். பின்னர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த முறைகேடுகள் எல்லாம்  திமுக காலத்தில் விதைக்கப்பட்ட  பார்த்தீனி செடிகள்.. இதற்கான நெட்வொர்க்கை அன்றே ஏற்படுத்திட்டாங்க...இப்போது அதனை ஒவ்வொன்றாக களை எடுத்து வருகிறோம்.... அதற்கு ஆதாரமாக, தற்போது சிபிசிஐடி கைது செய்துள்ள ஐயப்பன் என்பவர், திமுகவின் அப்பாவு என்பரின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்து உள்ளார்.

minister jayakumar open talk about stalin

மேலும் எல்போர்டு உதயநிதி தன்னை முந்திரிக்கொட்டை என விமர்சனம் செய்து இருந்தார். எல் போர்டு சொன்ன அந்த முந்திரி கொட்டை அவருடைய அப்பா ஸ்டாலின் தான்... இப்போ.. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறாரு எல் போர்டு உதயநிதி என கேள்வி எழுப்பி உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios