மக்களே உஷார்..! மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..! மாற்று வழி தேர்வு செய்யுங்க.! 

தேனாம்பேட்டை- சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதன் பின்னர் தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டுமே மெட்ரோ ரயில்சேவை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 20 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இன்று மாலை 3.10 மணிக்கு சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். இதன்மூலம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்ல வேண்டும் என்றால் வண்ணாரப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மட்டுமே பயணம் செய்து வந்திறங்க முடியும். 

அதன் பின்னர் மற்றொரு மெட்ரோ ரயிலை பிடித்து விமான நிலையம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுவாகவே மெட்ரோ ரயில் சேவையை மக்கள் விரும்பி பயன்படுத்த முக்கிய காரணம், ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மெட்ரோ ரயில் வந்து கொண்டே இருக்கும். மிக விரைவாகவும் துல்லியமாகவும் நாம் சென்று சேர வேண்டிய  இடத்தை வந்தடைய முடியும். இந்த ஒரு இந்நிலையில் திடீரென ஏற்பட்ட பழுதால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

இந்த பழுதை நீக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மூன்று மணியில் இருந்து பழுது சரி செய்யப்பட்டு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.