இப்போதைய காலகட்டத்தில் மனநலம் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. வேகமான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. உங்களுடைய மனநலத்தை பாதுகாக்கும் 5 ஜப்பானிய வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

ஒருவருடைய வாழ்க்கையில் மனநலம் என்பது மிக முக்கியமான ஒன்று. வேலைப்பளு, உறவுகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கல்வி அழுத்தம் போன்ற பல காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு சில வழிகள் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் சிலருக்கு பயனுள்ளதாக இருக்காது. அதிகம் பயன்படுத்தப்படும் 5 வழிகளைப் பற்றி பார்க்கலாம். 

எளிமையான வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கும்

ஜப்பானிய கலாச்சாரம் எப்போதும் எளிமையான மற்றும் கவனமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறது. ஜப்பானிய பழக்க வழக்கங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த முறைகள் வெளிப்புற சூழலில் மட்டுமல்லாமல், மன தெளிவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்க எந்த அரிசி பெஸ்ட்? 5 வகையான அரிசி லிஸ்ட் இதோ!

1. வாபி-சபி: குறைபாடுகளிலும் அழகைக் காணுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் ஒரு விஷயத்தில் முழுமை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நினைத்தது நடக்கவில்லை என்றால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் ஒருவிதமான விரக்தி ஏற்படுகிறது.

வாபி-சபி என்ற இந்த முறை குறைபாடுகளிலும் அழகை காண உதவுகிறது. எல்லாமே எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்று இல்லை. சில நேரங்களில் குறைபாடுகள் ஏற்படுவது இயல்புதான் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.

2. கன்சோ: எளிமையான வாழ்க்கை இடங்கள்

கன்சோ என்பது தேவையற்ற பொருட்கள் இல்லாமல் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது. இந்த பழக்கம் மனதை ஒருமுகப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் உதவுகிறது. உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

அடிக்கடி பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் ஒருவிதமான கவனச்சிதறல் ஏற்படும். அமைதியான மனநிலையை பெற நடுநிலையான வண்ணங்களையும், இயற்கையான பொருட்களையும் பயன்படுத்தலாம்.

3. ஷிகாட்டா கா நாய்: உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததை விட்டு விடுங்கள்.

ஷிகாட்டா கா நாய் என்றால் 'ஒன்றும் செய்ய முடியாது' என்று அர்த்தம். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை ஏற்றுக்கொள்வதை இது ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைந்து, எதன் மீது கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்தலாம்.

ஆனந்த் அம்பானியின் Tourbillon Panda கைக் கடிகாரம்; விலை என்ன தெரியுமா?

4. ஓசூஜி: மனதை தெளிவுபடுத்த ஆழமான சுத்தம்

ஓசூஜி என்றால் ஜப்பானிய மொழியில் 'பெரிய சுத்தம்' என்று அர்த்தம். இது ஒவ்வொரு சீசன் முடியும்போதும் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயம். வீடு, வேலை செய்யும் இடம் மற்றும் மேஜை போன்றவற்றை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. இகிகய்: உங்கள் நோக்கத்தையும் நிறைவேற்றத்தையும் கண்டறியுங்கள்.

இகிகாய் என்பது வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஜப்பானிய கருத்தாகும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடித்து, நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்தால் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்களுடைய இகிகாயை கண்டுபிடிக்க, நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதில் திறமையாக இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம்.