MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்க எந்த அரிசி பெஸ்ட்? 5 வகையான அரிசி லிஸ்ட் இதோ!

உடல் எடையை குறைக்க எந்த அரிசி பெஸ்ட்? 5 வகையான அரிசி லிஸ்ட் இதோ!

Best Rice For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால் எந்த அரிசி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 05 2025, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உடல் எடையை குறைக்க எந்த அரிசி பெஸ்ட்? 5 வகையான அரிசி லிஸ்ட் இதோ!

உடல் எடையை குறைக்க எந்த அரிசி பெஸ்ட்? 5 வகையான அரிசி லிஸ்ட் இதோ!

தற்போது உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதிபட்டு வருகிறார்கள். எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். காரணம் அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அது உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் தான். ஆனால், சிலருக்கோ ஒருவேளை அரிசி சாதம் சாப்பிட முடியாமல் இருக்கவே மாட்டார்கள். மேலும் அவர்கள் எடையை குறைக்கவும் நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் மனதில் தோன்றும் முதல் கேள்வி என்னவென்றால், அரிசி சாதம் சாப்பிடுவதன் மூலம் எடையை குறைக்க முடியாதா? என்றுதான். ஆனால் அரிசியில் சில வகைகள் உள்ளன அவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில அரிசிகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பிரவுன் அரிசி

பிரவுன் அரிசி

இந்த அரிசியில் அதிகளவு வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதால் பசி எடுக்காது. இதனால் நாம் அதிகமாக சாப்பிட மாட்டோம். மேலும் பிரவுன் அரிசியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால், இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

36
பாஸ்மதி அரிசி

பாஸ்மதி அரிசி

பாஸ்மதி அரிசியில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவோ உள்ளது. எனவே இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். அதுவும் குறிப்பாக இந்த அரிசியை நீங்கள் எண்ணெய் அல்லது நெய் இல்லாமல் சமைக்கும் போது எடையை சுலபமாக குறைக்கலாம்.

இதையும் படிங்க:  தினமும் வெறும் வயித்துல வெள்ளை பூசணி ஜூஸ்.. ஒரே மாசத்துல '5' கிலோ குறைவீங்க!

46
கருப்பு அரிசி

கருப்பு அரிசி

கருப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த அரிசி திருப்தியை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எடையைக் கட்டுப்படுத்துவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். இந்த அரிசியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

இதையும் படிங்க:  இந்த '5' காய்கறிகள் போதும்.. சர்னு உடல் எடையை குறைக்கலாம்!!

56
கேரள மட்டை அரிசி

கேரள மட்டை அரிசி

கேரள சிவப்பு என்று அழைக்கப்படும் இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த அரிசியில் இருக்கும் நார்ச்சத்து உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும் மற்றும் செரிமானத்திற்கும் உதவும். இந்த அரிசியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றுகள் நிறைந்துள்ளதால் அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

66
சாமை அரிசி

சாமை அரிசி

சாமை அரிசி பசையம் இல்லாத தானியம். இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகளவு உள்ளதால் இது எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த அரிசி சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது. இதனால் எடையை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம் அல்லது குறைக்கலாம். இந்த அரிசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது உடலில் ஊட்டச்சத்து சமநிலையை பராமரிக்கும் அதே வெளியே குறைக்கும் நோக்கத்திலும் உதவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Agathi Poo Kuzhambu : அகத்திப் பூ குழம்பு செய்து பாருங்க.. சுவையில் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!
Recommended image2
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image3
Gym Vs Park: ஃபிட்னஸுக்கு எது பெஸ்ட்? ஆய்வுகள் சொல்லும் உண்மை என்ன? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved