அளவோடு சுய இன்பம் செய்வதன் மூலமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி நன்மைகள் பெற முடியும். வயது வந்த ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு ஆளாவது என்பது இயல்பான உண்டு. அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் அங்குள்ள ஆண்களில் 92 சதவீதம் பேரும், பெண்களில் 62 சதவீதம் பேரும் சுய இன்பம் அனுபவித்திருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் ஆண்களை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தியாவில்பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது அமெரிக்காவை ஒப்பிடுகையில் குறைவு தான். 

சுய இன்பம் என்பதை பல்வேறு டுபாக்கூர் மருத்துவர்களும், மத தலைவர்களும் பாவம் என்கிற ரீதியில் ஒரு கருத்தை உருவாக்கி வைத்துள்ளனர். மேலும் சுய இன்பம் செய்வதால் ஆண்மை குறைவு ஏற்படும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்றும் பரவலாக கருத்துகள் உண்டு. ஆனால் இவை எல்லாம் எதுவுமே உண்மை இல்லை. 

சுய இன்பம் செய்வதால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று தற்போது வரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதே போல பெண்களுக்கு கர்பபம் அடைவதில் பிரச்சனை ஏற்படும் என்பதையும் யாராலும் நிரூபிக்க முடியவில்லை. எதையும் அளவோடு செய்தால் உடலுக்கு பாதிப்பில்லை என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தவறான கருத்துகள் பல இருந்தாலும் சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட முடியும்.

1) இதயத்தில் நல்லது சுய இன்பம் மூலமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களின் இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை அவர்களை அறியாமலேயே தேடிக் கொடுக்கின்றனர். சுய இன்பத்தில் ஈடுபடும் சமயத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. அதாவது சுய இன்பம் அனுபவிப்பது என்பது ஒர உடற்பயிற்சியை போல நமது உடலுக்கு உதவுகிறது.

2) இரவில் நன்றாக உறங்கலாம்  இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் செக்சிற்கு பிறகு நல்ல தூக்கத்தை பெற முடியும். அதே போலத்தான் சுய இன்பத்திற்கு பிறகும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தூக்கம் நன்றாக வரும். அதாவது உடலுறவை தொடர்ந்து உச்சகட்டத்தை பெறும் ஆணும் பெண்ணும் சரி கலைப்படைந்து நன்றாக தூங்கிவிடுவார்கள். இதே போலத்தான் சுய இன்பம் மூலமாக உச்சகட்டத்தை அடைந்துவிட்டால் உடல் இளைப்பாறி தூக்கம் நன்றாக வரும்.

3) நோய் எதிர்ப்பு சக்தி சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கே தெரியாமல் தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். செக்சாக இருந்தாலும் சரி சுய இன்பமாக இருந்தாலும் சரி உச்சகட்டத்தை அடையும் போது நமது உடலில் கார்டிசோல் அதிகமாகிறது. இந்த கார்டிசோல் என்பதுதான் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கான வினையூக்கி. 

4) தன்னம்பிக்கை ஏற்படும் பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முதல் முறை செக்ஸ் என்று வரும் போது தயங்குவார்கள். இவர்களுக்கு சுய இன்பம் மூலமாக தன்னம்பிக்கை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதாவது சுய இன்பத்தின் மூலமாக உச்சகட்டத்தை அடையும் நம்மால் செக்சின் மூலமாகவே உச்சகட்டத்தை அடைய முடியும் என்கிற நம்பிக்கை ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஏற்படும்.

5) சிறந்த செக்சுக்கு உதவும் பெண்களை பொறுத்தவரை சுய இன்பம் அனுபவிப்பதன் மூலமாக அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். வைப்ரேட்டர்களை யூஸ் செய்து சுய இன்பம் அடையும் பெண்கள் தங்களுக்கான உச்சகட்டம் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தனது துணைவரை செக்சின் போது வழிநடத்தி உச்சகட்டம் பெறுவதுடன் அவரையும் இன்பம் அடையவைக்க முடியுமாம்.

மேற்கூறிய பலன்கள்அனைத்துமே இயல்பாக ஏற்படக்கூடியவை. இந்த பலன்களை எதிர்பார்த்து பிரத்யேகமாக சுய இன்பம் செய்வது என்பது சரியான பழக்கம் இல்லை. உங்களுக்கு சுய இன்ப பழக்கம் இருக்கும்பட்சத்தில் இதனை படித்து நீங்கள் தெளிவு பெற்றுக் கொள்ளலாமே தவிர மிகத் தீவிரமாக தொடர வேண்டாம்.