வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் ரூ.147 உயர்ந்து ரூ.881-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 மாதங்களில் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.185 அதிகரித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க;-  பாஜக பதறவிட்டு... காங்கிரஸை கதறவிட்டு... மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு தந்த கெஜ்ரிவால்..!

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 734 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், ரூ.147 உயர்ந்து 881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. மானியம் இல்லா சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ. 881, டெல்லி ரூ. 858.50, கொல்கத்தா ரூ. 896, மும்பை ரூ. 829.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரலாறு காணாத விலையேற்றத்தால் பொதுக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.