பல்லி கத்தினால் என்ன? பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் என்ன? அதற்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை சாஸ்திர, சம்பிரதாயத்தில் முக்கியத்துவத்தை பின்பற்றி வருகின்றனர். தமிழ் திரைப்படமான ''அரசு'' படத்தில் வரும் ஒரு காட்சியில், கூட சத்யராஜ் மற்றும் வடிவேலுவுடனான ஒரு காட்சியில், பல்லி இதற்கு மட்டும் கத்துதா என்று வேடிக்கையாக கடந்து சென்றிருப்பார் வடிவேலு. இதனை நம் அனைவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி கத்தினால் என்ன? பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் என்ன? அதற்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

பல்லி விழுந்தால் செய்ய வேண்டியவை :
நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த பல்லிகளை வணங்கினால் வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக் கூடிய சோகங்களை நீக்கி, நன்மை கிடைக்கும். இருப்பினும், பல்லி விழும் இடங்களை வைத்து நல்லதா? கெட்டதா? தோஷங்களும் பரிகாரங்களும் உள்ளன. அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
பல்லி தலையில் விழுந்தால்:
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.
பல்லி நெற்றி விழுந்தால்:
நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும். வயிறு பகுதியில் பல்லி விழுந்தால் வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.
புருவத்தில் பல்லி விழுந்தால்:
புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அதுவே கண்கள் அல்லது கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது அர்த்தம்.
பல்லி முதுகில் விழுந்தால்:
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
பல்லி தோளில் விழுந்தால்:
தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.
பல்லி கணுக்கால் பகுதியில் விழுந்தால்:
கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.
மூக்கில் விழுந்தால்:
மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்.
மணிக்கட்டில் விழுந்தால்:

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.
தொடை பகுதியில் விழுந்தால்:
தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.
உதடு:
உதடு மீது பல்லி விழுதல் உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.

பல்லி கத்தினால் என்ன பலன்
பல்லி எழுப்பக் கூடிய சப்தம் வைத்து ஜோதிட பலன் பார்க்கலாம். வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்ற அச்சம் வரும். வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம்.
சரி வீட்டில் எந்த திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்:
தென்மேற்கு திசை:
வீட்டின் குபேர மூலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் விருந்தினர்கள் வருவார்கள். அதாவது அப்பா, அம்மா உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகை உண்டாகும். அதனால் நன்மை ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று அர்த்தம்.
தென்கிழக்கு திசை:
அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தம் போட்டால் வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்பு உண்டு. மேலும் சில நாள்களில் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வரலாம் என்று அர்த்தம்.
கிழக்கு திசை:
கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல.
வடக்கு திசை:
வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம்.
