சர்க்கரை நோயாளிகள் லெமன் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் ?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளை தேர்வு செய்வது மிக மிக முக்கியம். சம்மரில் அதிகம் குடிக்கப்படும் லெமன் ஜூஸ், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா? கெட்டதா? அப்படி அவர்கள் குடித்தால் என்ன நடக்கும்?

சம்மர் வருவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க துவங்கி விட்டது. இனி தாகத்தை தணிக்கும், உடலுக்கு குளிர்ச்சி பானங்களை தேடி தேடி குடிக்க துவங்கி விடுவோம். வெயில் காலங்களில் அடிக்கடி ஏற்படும் தாகத்தில் இருந்து தப்பிக்க, உடல் எடையை குறைக்க, கடினான ஒர்க் அவுட்டிற்கு பிறகு என பல நேரங்களில் பல காரணங்களுக்காக லெமன் ஜூஸ் குடிப்பது உண்டு. இதில் குறைவான கலோரி உள்ளதால் புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா? கெட்டதா? சர்க்கரை நோயாளிகள் லெமன் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?
லெமன் ஜூஸ் குடிக்கலாமா?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது வரையறுக்கப்பட்ட அளவை விட கூடினாலோ, குறைந்தாலோ அதை நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் என்கிறோம். நம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருப்பதில் நம்முடைய உணவுகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. குறிப்பாக ரத்தத்தில் வேகமாக கலந்து, உடனடியாக நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியை, ஆற்றலை தரக் கூடிய ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். லெமன் ஜூஸ் குடித்தால் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என நினைத்து பலரும் அதை தவிர்ப்பது உண்டு. ஆனால் மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு தான் லெமன் ஜூஸ் ரொம்பவே நல்லது. லெமன் ஜூஸில் கலோரிகள் மிக குறைவு. இது அவர்களை எப்போதும் நீரோட்டத்துடன் வைத்திருக்கும்.
லெமன் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்?
சாதாரணமாகவே வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிகமான நீர் உடலில் இருந்து வெளியேறும். சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வையுடன், சிறுநீராகவும் அதிகமான தண்ணீர் வெளியேறினால் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நீர் வெளியேறுவது உடலில் உள்ள நீர்ச்சத்து வேகமாக குறைய வாய்ப்பை ஏற்படுத்தி விடும். ஆபத்தை ஏற்படுத்தி விடும். இது ரத்தத்தில் குளூகோஸ் அளவு அதிகரிப்பதை விட ஆபத்தான நிலையை ஏற்படுத்தக் கூடியதாகும். எலுமிச்சையில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம். அதனால் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை மெதுவாக வெளியேற செய்கிறது. இது கொலஸ்டிராலை கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சரியாக பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை காக்கிறது.
லெமன் ஜூஸில் இருக்கும் சத்துக்கள் :
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எலுமிச்சையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் நிறைந்து உள்ளன.
லெமன் ஜூஸினை தண்ணீர் கலந்து தினசரி குடிப்பதால் மட்டும் உடலில் நார்ச்சத்து, வைட்டமின் சி சத்துக்கள் கிடைத்து விடாது. அதே சமயம் மற்ற கலோரிகள் நிறைந்த பானங்கள், சர்க்கரை நிறைந்த சோடாக்களை விட இது ரொம்பவே சிறந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் தயாரிக்கும் லெமன் ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் சாப்பிடுவது அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாகும்.