மாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது..! சமைத்து  கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..! 

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச்சி  என்ற இடத்தில் இருக்கும் புஜ் நகரத்தில் சுவாமி நாராயண சாமி கோவில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

மாதவிலக்கான மாணவிகள் மற்ற மாணவிகளுடன் சேர்ந்து உணவு அருந்தக் கூடாது என்ற விதிமுறை இங்கு உள்ளது. இந்த விதிமுறையை மீறி சில மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது இதனை தெரிந்து கொள்வதற்காக அங்கு தங்கியிருந்த 60 மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்துள்ளனர் பெண் ஊழியர்கள். கடந்த 11ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் விடுதி ஒருங்கிணைப்பாளர் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்து உள்ளனர் 

கோவிலில் இருக்கக்கூடிய மதத்தலைவர் கிருஷ்ண சுவராப் தற்போது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். அதன்படி மாதவிலக்கான பெண்கள் சமைக்கக் கூடாது என்றும் அவ்வாறு சமைத்து கணவருக்கு கொடுத்தால் அவர்கள் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பார்கள் என்றும் அந்த உணவை உண்ட ஆண்கள் எருதுவாக பிறப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் நமது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆண்கள் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார் அவர். இவரின்  பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.