MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • aadi kummayam recipe: செட்டிநாட்டு ஸ்வீட் ரெசிபி...ஆடி கும்மாயம் ஈஸியாக செய்வது எப்படி?

aadi kummayam recipe: செட்டிநாட்டு ஸ்வீட் ரெசிபி...ஆடி கும்மாயம் ஈஸியாக செய்வது எப்படி?

ஆடி மாத புனித வழிபாட்டில் அம்மனுக்குப் படைக்கப்படும் செட்டிநாடு பாரம்பரிய இனிப்பு "ஆடி கும்மாயம்". ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த உன்னதமான நைவேத்தியத்தை ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களில் அம்மனுக்குப் படைத்து அருள் பெறலாம்!

1 Min read
Author : Priya Velan
Published : Jul 24 2026, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ஆடி கும்மாயம் செய்யும் எளிய செய்முறை :
Image Credit : Google

ஆடி கும்மாயம் செய்யும் எளிய செய்முறை :

ஆடி மாதத்தில் இறைவனுக்குப் படைக்கப்படும் மிக முக்கியமான பாரம்பரிய நைவேத்தியங்களில் 'ஆடி கும்மாயம்' முதன்மையானது. செட்டிநாட்டுப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இந்த இனிப்பு வகை, சுவையில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் அலாதியானது. பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம்பருப்பின் நற்குணங்கள் நிறைந்த இந்த உணவை, கஷ்டமே இல்லாமல் மிக எளிமையாகவும், கடைகளில் வாங்குவது போன்ற பதம் தவறாத சுவையிலும் வீட்டில் எப்படிச் செய்வது என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம். சரியான அளவும், பதமும் தெரிந்து கொண்டால் புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட ஈஸியாக இந்த பலகாரத்தை செய்து விடலாம். இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
வறுக்கும் பதம் :
Image Credit : Google

வறுக்கும் பதம் :

ஒரு பாத்திரத்தில் பச்சைப்பருப்பு மற்றும் தோலுரித்த உளுந்தம்பருப்பை (4:1 என்ற விகிதத்தில்) மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

Related image1
Aadi Masam 2026: தீராத கடன் பிரச்சனைகள் தீர, ஆடி இரண்டாவது செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடுகள்.! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!
Related image2
Aadi Velli: செல்வம் பெருக ஆடி வெள்ளியில் செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள்!
38
பாகு காய்ச்சுதல்:
Image Credit : Google

பாகு காய்ச்சுதல்:

நல்ல தரமான உருண்டை வெல்லத்தை பாகு காய்ச்சி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். வெல்லப் பாகு கம்பிப் பதம் வரத் தேவையில்லை; சூடானால் போதுமானது.

48
கட்டியில்லா கரைசல்:
Image Credit : Google

கட்டியில்லா கரைசல்:

அரைத்த மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் ஏதுமின்றி மென்மையாகக் கரைத்து, தயாராக உள்ள வெல்லப் பாகுடன் சேர்க்க வேண்டும்.

58
கிளறும் பதம்:
Image Credit : Google

கிளறும் பதம்:

மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியாகத் தொடங்கும் போது, சுத்தமான பசு நெய்யைச் சிறுகச் சிறுகச் சேர்க்க வேண்டும்.

68
மணமூட்டும் ரகசியம்:
Image Credit : Google

மணமூட்டும் ரகசியம்:

கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில், சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்குத்தூள் சேர்த்தால் செரிமானம் ஆவதுடன் தனித்தனி நறுமணமும் கிடைக்கும்.

78
கடைசி பதம்:
Image Credit : Google

கடைசி பதம்:

கைகளில் சிறிதளவு தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவின் மீது தொட்டால், கை ஒட்டாமல் பளபளப்பாக இருக்க வேண்டும். இதுவே கும்மாயம் தயாரானதற்கான சரியான பதமாகும்.

88
ருசிகரமான டிப்ஸ்:
Image Credit : Google

ருசிகரமான டிப்ஸ்:

பாரம்பரிய சுவை இரட்டிப்பாக, நெய்யில் வறுத்த முந்திரிக்கு பதிலாக, லேசாக வறுத்த நெல் பொரியை மேலாகத் தூவிப் பரிமாறினால் நாவிற்குப் புதிய சுவை அனுபவம் கிடைக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆன்மீகம்
உணவு
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Tank: கருப்பா? வெள்ளையா? நீலமா? உங்க வீட்டுக்கு எந்த கலர் வாட்டர் டேங்க் பெஸ்ட்? எது ஆரோக்கியமானது?
Recommended image2
Fun Fact: வார்ட்ரோப், கப்போர்டு, க்ளோசெட்.! இதெற்கெல்லாம் உள்ள வேறுபாடுகள் உங்களுக்குத் தெரியுமா?
Recommended image3
Vastu vs Science : வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன ஆகும்?
Related Stories
Recommended image1
Aadi Masam 2026: தீராத கடன் பிரச்சனைகள் தீர, ஆடி இரண்டாவது செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடுகள்.! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!
Recommended image2
Aadi Velli: செல்வம் பெருக ஆடி வெள்ளியில் செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved