lab assistant result came



பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட பள்ளி ஆய்வக உதவியாளர் பணித் தேர்வுக்கான முடிவுகள் மாவட்டவாரியாக  http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று  வெளியானது.

அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப, அதாவது லேப் அசிஸ்டென்ட் பணிகளுக்காக 2015-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைப்பெற்றது இந்த தேர்வை 8 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர் எழுதினார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது .

இருந்தாலும் சில பல  சிக்கல்  ஏற்பட்டதால்  தேர்வு முடிவுகள்  வெளியிடுவதில் அரசுக்கு  இடைஞ்சல் எற்பட்ட்டது. இந்நிலையில்  விரைவில்  தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கடந்த வாரம் செய்திகள் வெளியானது . இதனை தொடர்ந்து தற்போது  பெரிதும் எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

லேப் அசிஸ்டென்ட் பதவிக்கான தேர்வு முடிவுகளை மாவட்டவாரியாக  http://dge.tn.gov.in , ​   http://dge1.tn.nic.in   மற்றும் http://dge2.tn.nic.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்பது  குறிப்பிடத்தக்கது