கோதுமை களி செய்வது எப்படி ?

சர்க்கரை நோயாளிக்கு மிக சிறந்த உணவு என்றால் அதில் கோதுமை களியும் ஒன்று. கோதுமை களி செய்வது மிகவும் சுலபம். வெறும் ஐந்து நிமிடத்தில் சூப்பரான கோதுமை களி ரெடி பண்ணலாம் வாங்க ......

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்,

உப்பு - சிறிது,

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

தண்ணீர் - 3 கப்.

செய்முறை:

களி செய்ய உகந்த பாத்திரத்தில் , 2-1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

கோதுமை மாவினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றவும். பின்னர் நன்றாக வேக விடவும்.

கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.

இந்த பதம் வந்ததும் இறக்கவும். சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

இதனுடன் சேர்த்து சுவைத்தால், சுவையும் அதிகம்..... சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது......!