Asianet News TamilAsianet News Tamil

மிக்ஸியில் இதெல்லாம் தெரியாம கூட போட்டு அரைச்சுடாதீங்க. இல்லனா அவ்வளவுதான்!!

Mixer Grinder Tips : மிக்ஸியில் எந்தெந்த பொருட்களை அரைக்க கூடாது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

kitchen tips 7 things that you should avoid grind in your mixer in tamil mks
Author
First Published Aug 5, 2024, 11:33 AM IST | Last Updated Aug 5, 2024, 12:16 PM IST

அந்த காலத்தில் சட்னி மற்றும் குழம்பிற்கு ஏதாவது மாசாலா அரைக்க வேண்டும் என்றால் அம்மியில் தான் அரைப்பார்கள். ஆனால், இன்றைய நவீன காலத்தில் அம்மியில் யாரும் மசாலா அரைப்பதில்லை. காரணம், அம்மிக்கு பதிலாக மிக்சி வந்துவிட்டது. மிக்ஸியில் வீடுகளே இல்லை என்றே சொல்லலாம். 

மிக்ஸி பயன்படுத்துவது சமையலில் இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சொல்லு போனால் அன்றாட வாழ்க்கையில் சமையலை எளிதாக மிக்ஸி பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், சில சமயங்களில் மிக்ஸியானது சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. இதற்கு காரணம் நாம் எல்லா பொருட்களையும் அரைப்பதால் தான். ஆம், மிக்ஸியில் நாம் சில பொருட்களை அரைக்க கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை மீறி அரைத்தால் மிக்ஸி சீக்கிரம் பழுதாகிவிடும். எனவே இந்த கட்டுரையில் மிக்ஸியில் எந்தெந்த பொருட்களை அரைக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Kitchen Hacks : உங்கள் மிக்ஸி நீண்ட நாள் நீடிக்க விரும்பினால் 'இந்த' ஸ்பெஷல் டிப்ஸ் உங்களுக்காக..!

மிக்ஸியில் அரைக்கக்கூடாத பொருட்கள்:

1. காய்கறிகள்:
மிக்ஸியில் காய்கறிகளை அரைக்கலாம். ஆனால், அவற்றை பொடி பொடியாக கட் செய்து பின் அரைக்க வேண்டும். அதுபோல நார் உள்ள காய்கறிகளை ஒருபோதும் அரைக்கவே கூடாது. ஏனெனில், அந்த நாரானது மிக்சி பிளேடில் சிக்கி மிக்ஸியின் மோட்டார் பழுதடைந்து விடும்.

2. சூடான பொருட்கள்:
பலர் சூடான பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைப்பதை வழக்கமாக்கி உள்ளனர். ஆனால், இப்படி சூடான பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்தால் அவற்றின் அழுத்தத்தால் மிக்ஸி ஜார் வெடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, சூடான பொருட்களை நன்கு ஆற வைத்த பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3. ஐஸ் கியூப்:
சில வீடுகளில் ஷேக்ஸ், ஸ்மூத்திகள் செய்யும்போது அவற்றுடன் ஐஸ்க்யூ போட்டு அரைப்பார்கள். இதனால் மிக்ஸியில் பிளேடுகள் மற்றும் மோட்டார் வீணாகிவிடும். முக்கியமாக, குளிர்ந்த மற்றும் குறைந்த பொருட்களை ஒருபோது மிக்ஸியில் அரைக்க வேண்டாம்.

இதையும் படிங்க:  ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், உங்கள் பழைய மிக்ஸியை புதிது போல் மாற்றி மீண்டும் பயன்படுத்த..சூப்பர் டிப்ஸ் .!

4. மசாலா பொருட்கள்:
பலரும் இது தவறை செய்கிறார்கள். அதாவது, உணவின் சுவை அதிகரிக்க இன்ஸ்டன்ட் மசாலா பொருட்களை பிரெஷ் ஆக வீட்டிலேயே செய்வார்கள். இதற்காக அவர்கள் முழு மசாலாக்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்கிறார்கள். ஆனால், இப்படி செய்யும் போது மிக்ஸி பிளேடு பழுதாகிவிடும். எனவே நீங்கள் அதை உங்கள் கைகளால் நசுக்கி அல்லது  இடித்து பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து பயன்படுத்துங்கள்.

5. பருப்பு வகைகள்:
பருப்பு வகைகள் மிகவும் கடினமாக இருக்கும். எனவே, அவற்றை மிக்ஸியில் போட்டு ஒருபோதும் அரைக்க கூடாது. மீறினால், மிக்ஸியின் பிளேடு வீணாகிவிடும்.

6. கிழங்கு வகைகள்:
கிழங்கு வகைகளையும் மிக்ஸியில் அரைக்கக் கூடாது. ஏனெனில், அவற்றில் தண்ணீர் சேர்த்து அரைக்கும் போது மாவானது ஒட்டிக்கொள்ளும். இதனால் மிக்ஸி ஜாரின் பிளேடும் சீக்கிரம் பழுதாகிவிடும்.

7. காபி கொட்டைகள்:
சிலர் தங்களது வீடுகளில் காபி கொட்டைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைப்பார்கள். ஆனால், காபி கொட்டைகளை ஒருபோதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க கூடாது ஏனெனில், அவை மிக்ஸியில் சிக்கிக் கொள்ளும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios