Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர் அட்சதை தூவ திருமணம் செய்த திருநர் ஜோடி.. காதலர் தினத்தன்று கேரளாவில் ருசிகரம்!

உண்மையான காதலுக்கு எதுவும் தடையில்லை என்பது கேரளாவில் மீண்டும் நிரூபிணமாகியுள்ளது.  
 

kerala transgender couple marriage in valentines day
Author
First Published Feb 15, 2023, 3:38 PM IST

காதல் அப்படித்தான்.. அது ஒரு மந்திரம் போன்றது.. இதயத்தில் தோன்றும் ஓர் இனிய உணர்வு.. ஒருவருக்கு காதல் எழும்போது அங்கு  ஜாதி-மதம், அந்தஸ்து, மாநிலம்-நாடு, பாலினம், வயது ஆகிய எதுவும் பெரிதில்லை. அதற்கு சான்றாக காதலில் சுவாரசியமான சம்பவங்கள் நடந்துவருகின்றன. 

கேரளாவில் மூன்றாம் பாலினத்தவர் திருமணம் செய்தது கவனம் ஈர்த்துள்ளது. அதுவும் காதலர் தினத்தன்று நடந்தது கூடுதல் சிறப்பு. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலவாச்சேரியைச் சேர்ந்த பிரவீன்நாத்தும், மலப்புரம் மாவட்டம் கோட்டைக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐசுவும் காதலித்துள்ளனர். 

இதற்கு ஆரம்பத்திலிருந்தே இருகுடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு பெற்றோரின் ஆசியுடன் பிரவீன்நாத், ரிஷானா ஐஷு  ஆகியோர் திருமணம் நேற்று பாலக்காட்டில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். 

யார் இவர்கள்? 

பிரபல மாடலாக அறியப்படும் திருநங்கை ரிஷானா திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர் மிஸ் மலபார் விருதை வென்றிருக்கிறார். தற்போது பாடி பில்டராக இருக்கும் பிரவீன், 2021ல் மிஸ்டர் கேரளா பட்டத்தை வென்றவர். இவர் 2022ஆம் ஆண்டு மும்பையில் நடந்த சர்வதேச பாடி பில்டிங்கில் திருநங்கைகள் பிரிவில் பங்கேற்றார். தற்போது நடிப்பில் களம் கண்டு வருகிறார். 

இதையும் படிங்க: கேரளாவின் முதல் திருநங்கையர் கல்யாணம்! காதலர் தினத்தில் மனம்முடித்த திருநங்கை ஜோடி!

காதல் பயணம் 

பிரவீன் தனது 18வது வயதில் தன் பாலினம் குறித்து அறிந்தார். அவரது நடவடிக்கைகளின் மூலம்  வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக இருந்தனர். பிரவீன்நாத், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி. அவர் கல்லூரியில் படிக்கும்போது, திருநங்கைகள் அமைப்பான சஹாயத்ரிகா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ரிஷாவை சந்தித்துள்ளார். அதன் பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. 

இருவீட்டார் சம்மதம் 

இவர்கள் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் எளிதில் இவர்கள் காதல் கைகூடவில்லை. ரிஷானா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அவரை திருநங்கையாக ஏற்க அவரது குடும்பத்தினர் தயாராகயில்லை. அவரை மனநோயாளியாகவே பார்த்தனர். ஆனால் பின்னாளில் அவரது குடும்பம் ரிஷானவை ஏற்றுக்கொண்டது. தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

அண்மையில் நாட்டிலேயே முதல் மூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது, இவர்களும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: 'குழந்தையை கருவில் சுமக்கும் அப்பா' நெகிழ வைக்கும் மனைவி மீதான அன்பு..! கேரளாவில் சுவாரசியம்

Follow Us:
Download App:
  • android
  • ios