Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் போலீஸ் நிலையத்தில் சூப்பரா கோழிக்கறி சமைத்து ருசித்த போலீசாருக்கு ஐஜி நோட்டீஸ்; வைரல் வீடியோ!!

கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் போலீஸ் நிலையத்திற்குள் சிக்கன் குழம்பு தயாரிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Kerala police Chicken cooking video goes viral
Author
First Published Jul 27, 2023, 4:51 PM IST

கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவில் உள்ள இலவம்திட்டா போலீசார் காக்கி அணிந்த நிலையில், போலீஸ் நிலையத்தில் சிக்கன் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு என பலவகை சமையல்களை செய்தி அசத்தி ருசித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றுள்ளது. இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசுக்கு முழு ஸ்டேஷன் அதிகாரிகளும் பதில் அளிக்க வேண்டும் என்று கேரள தெற்கு மண்டல ஐ.ஜி. கேட்டுக் கொண்டுள்ளார். 

Rose Petals : இந்த கவர்ச்சியான பூவை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்...5 விதமான நன்மைகள் கிடைக்கும்..!!

போலீஸ் நிலையத்தில் போலீசார் மரவள்ளிக்கிழங்கு மற்றும் கோழிக் குழம்பு சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஸ்டேஷனில் பணியில் இருக்கும் போலீசார் எப்படி இந்த வேலையை செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் பரப்புவதற்கான காரணம் என்னவென்றும் கேட்கப்பட்டுள்ளது.

Sweet potatoes: சர்க்கரை வள்ளி கிழங்கில் ஒளிந்திருக்கும் அற்புத  ஊட்டச்சத்துக்கள்...!!

சிலர் இந்த வீடியோவைப் பார்த்தவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர். பின்னணி பாடலுடன் மரவள்ளிக்கிழங்கு உணவு மற்றும் சிக்கன் குழம்பு சமையல் வீடியோவை பகிர்ந்துள்ளனர். சாப்பாடு செய்தும், அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டாடினர். 

இந்த சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று, அதை போலீஸ் அதிகாரி ஒருவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios