கனிமொழி கேட்டாரே ஒரு கேள்வி..!  மத்திய அமைச்சர் கொடுத்த பதில் என்ன தெரியுமா ..? 

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் திட்டம் பற்றி நாடாளுமன்ற மக்களவையில் கனிமொழி எம்.பி. கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி...

“2014 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட 100 படுக்கைகள் கொண்ட இ எஸ் ஐ மருத்துவமனை திட்டத்துக்கு  மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு ஏதேனும் செய்திருக்கிறதா?  இந்த மருத்துவமனைத்  திட்டத்தை நிறைவு செய்வதற்கு கால வரம்பு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?” என்று பிப்ர்வரி 10 ஆம் தேதி எழுத்துபூர்வமாக  கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் அளித்த பதிலில்,

தோற்றாலும் பாஜக கெத்து ...! காங்கிரஸ் "ஆள் அவுட்"...!

“முதலில் 2014 ஆம் ஆண்டு  இந்த திட்டம் மத்தியப் பொதுப்பணித் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி பகுதியில் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்ததால்,  மருத்துவமனைக்கான கட்டிடப் பணிகள் தொடங்கப்படவில்லை.  இதையடுத்து  மத்திய பொதுப்பணித்துறையிடம் இருந்து பணிக்கான ஆணை திரும்பப் பெறப்பட்டது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு இந்தப் பணி இ எஸ் ஐ நிறுவனத்தால்,  இன் ஜினியரிங் ப்ராஜக்ட் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.  ஆனால் ஒப்பந்தம் கையெழுத்திடப் படாத நிலையில்,  இந்த பணி ஆணையும் ரத்து செய்யப்பட்டது.  இப்போது தூத்துக்குடியில் இ எஸ் ஐ காப்பீட்டு தாரர்கள் 50 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பதால்,  இ எஸ் ஐ மருத்துவமனை அமைக்கும் பணி மீண்டும் மத்திய பொதுப்பணித்துறைக்கே வழங்கப்பட்டுள்ளது” என்று பதில் அளித்துள்ளார்.

இதன் மூலம் மிக விரைவில், தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் திட்டம் விரைவில் நிறைவேறும் என்பது உறுதியாகி உள்ளது