தோற்றாலும் பாஜக கெத்து ...! காங்கிரஸ் "ஆல் அவுட்"...!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகளை கொடுத்த திமுக தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்து சற்று யோசிக்க தொடங்கி உள்ளது. காரணம்... காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதே...

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

தொடக்க முதலே பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வந்தது. ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்த போது ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி. அப்போது பாஜக 3 இடங்களிலும், ஆம் ஆத்மி 67 இடங்களையும் பிடித்து ஆட்சியை  கைப்பற்றியது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் மீதமுள்ள 8 இடங்களை பாரதிய ஜனதாவும் பெற்று உள்ளது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் முன்னேற்றமடைந்து சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் மூன்றில் இருந்து 8 இடங்களை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலிலும் ஒரு இடத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் காங்கிரசுக்கு டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட இல்லை. அதன்படி பார்த்தால்  காங்கிரஸ் அழிந்தே விட்டது என கூட சொல்லலாம். ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு நிகராக வெற்றி வாய்ப்பை பெறவில்லை என்றாலும் முன்பு இருந்ததைவிட பாரதி ஜனதா கட்சிக்கு ஆதரவாளர்கள் அதிகரித்து உள்ளனர் என்றே எடுத்துக்கொள்ளலாம். மேலும் ஆம் ஆத்மி  3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றி மாஸ் காண்பித்து உள்ளது.