குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், அந்த பிரச்சனைக்கு காரணம் என்ன என்று தெரியாமலேயே மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் குற்றம் சொல்லி கொண்டே வாழ்க்கை நடத்தும் தம்பதிகள் ஏராளம். 

அதில் சினிமாவில் வருவதை போன்று 'ஐ லவ் யு' என்கிற சக்தி வாழ்ந்த ஒரு வார்த்தை சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் ஐலவ்யு என்கிற ஒற்றை வார்த்தை மட்டும் போதுமா என்றால் அது சந்தேகம் தான். அந்த வார்த்தைக்கு பின் உள்ள உண்மை சுவாரசியங்களை புரிந்து கொண்டால் மட்டும் போதும் வாழ்க்கை மிகவும் சூப்பராக செல்லும். 

ஆளுமை:

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையான, ஆளுமை உண்டு. ஒரு சிலருக்கு தைரியமான ஆளுமை இருக்கும். அவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். ஒரு சிலர் பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பார்கள். அவர்கள் தங்களை போன்ற சுபாவம் கொண்டவர்களிடம் மட்டுமே அதிகம் பழக விரும்புவார்கள்.

முதலில் கணவன் மனைவி இருவரும் யார் எந்த சுபாவம் கொண்டவர்கள் என புரிந்துக்கொண்டாலே போதும் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும்.

பொதுவாக திருமணம் செய்வதற்கு 10 க்கு 7 பொருத்தம் இருக்க வேண்டும் என சொல்வார்கள். அதற்கு பதிலாக மனைவிக்கு பிடித்த ஏழு விருப்பங்களை கணவர்கள் ஏற்றுக்கொண்டாலே போதும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே அச்சாரம்:

முன்பெல்லாம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, தம்பதிகள் தங்களுடைய குடும்பத்தை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக வாழக்கை நடத்துவார்கள். ஆனால் தற்போது தனிப்பட்ட ஆளுமை, தனிப்பட்ட கருது, ஈகோ போன்ற பல காரணங்களை காட்டி பிரிந்து செல்லும் பெற்றோர்களும் உண்டு. 

கணவன் மனைவியை சார்ந்து இருப்பது மனைவி கணவனை சார்ந்து இருப்பது... 

அதாவது ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்கிற சூழல், அன்றே இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில் நீ இல்லாவிட்டாலும் நான் இருப்பேன் என்கிற சூழல் உள்ளது என்பது பலராலும் மறுக்க முடியாததாக உள்ளது.

எல்லாவற்றிக்கும் தன் துணையுடன் சண்டை போடுவதற்கு பதிலாக தவறை உணர்ந்து கொண்டாலே நிம்மதியாக வாழலாம்.

மனைவி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் எப்போதும் கணவன் சொல்வதையே பொறுமையாய் அமர்ந்து கேட்கும் ஒரு நபராக மனைவி உள்ளார். ஆனால் ஆண்களுக்கு இந்த பக்குவம் 50 வயதில் தான் ஏற்படுகிறது. 

அன்றைய காலக்கட்டத்தில், கணவன் செய்யும் எல்லா தவறுகளையும் ஏற்றுக்கொண்டு மனைவி குடும்பம் நடத்தியதற்கு காரணம், பொருளாதாரா ரீதி என்பது கிடையாது. அதற்கு பதிலாக கணவன் மார்களிடம் உள்ள நல்ல குணங்களுக்கு மதிப்பு கொடுத்து தான் மனைவிகள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை.

எப்போதெல்லாம் கணவன் மனைவிக்கு இடையே, பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம். முன்பு நடந்த இனிமையான சம்பவங்களை நினைத்து கொள்ளுங்கள். 

காதல் தாமத்தியத்தை விட நட்பை அதிகமாக காட்டுங்கள். இருவரும் நிறைய பேசுங்கள், பிள்ளைகள் பற்றியும் அவர்களுடைய எதிர்காலம் பற்றியும் நிறைய பேசுங்கள். 

அனைத்திலும் மிகவும் முக்கியமானது, கணவன் மனைவி பிரச்சனைக்குள். எப்போதும் மூன்றாவது நபரை உள்ளே விடாதீர்கள். அது வேறு விதமான பிரச்சனைகளை வழி வகுக்க வாய்ப்பு உள்ளது. 

வீட்டில் இருக்கும் போது, உங்களுடைய கைபேசியை அரை மணி நேரம்... தாராளமாக மனைவி பார்த்தாலும் பிரச்சனை இல்லை என்று வைத்தால் உங்களுக்குள் தாமதியம் சிறக்கும். ஆனால் போன் வந்தவுடன் போனை எடுத்து கொண்டு போய் ரகசியமாக நீங்கள் பேசினால்... வாழ்க்கை முடிந்து விட்டது என அர்த்தம்.

அதே போல் ஆண்கள்...செய்யும் தவறுகளை எல்லாம் செய்து விட்டு... நடிப்பில் சிவாஜியையே மிஞ்சும் அளவிற்குக்கு ஐலவ்யு என ஆங்கில வார்த்தையால் கூல் செய்து விடுவார்கள். 

மனைவிகளும் 'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்' என கணவனை நம்பி நம்பி ஏமாற்றம் அடைவதோ பெண்கள் தான். இதற்க்கு போலி தனமாக ஐ லவ் யு என கூறி அன்பு காட்டுவதை விட, தவறு செய்யும் போது சாரி என கூறி உண்மையை ஒற்றுக்கொண்டாள் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாகும்