காதலில் முத்தமின்றி ரத்தம் அடங்காது, என முரட்டுத் தனமாக பாயாமல் முத்தம் கொடுப்பதிலும் அறிவியல் சார்ந்த முறைகள் உள்ளன. முத்தமிட ஏற்ற சூழ்நிலையை தேர்ந்தெடுத்தால்தான் முத்தமிடும் மனநிலையும் உருவாகும். சூரிய உதயம் அல்லது அஸ்தமனம் போன்ற வித்தியாசமான பின்னணி நல்லது. ஆள் அரவமற்ற அமைதியான சூழல் முதல் முத்தத்தை பதிக்க ஏதுவானது. வெளியே எங்கும் சூழல் சரியாக வாய்க்காவிட்டாலும் இருவரில் யாராவது ஒருவரின் வீட்டில் சரியான இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கலாம். 

முத்தம் கொடுக்க ஆயத்தமாகும்போது, மெதுவாக அவளது கரத்தைப் பற்ற வேண்டும். கையை பற்றும் விதம் நெருங்குவதை உணர்த்துவதோடு  அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தப்படுத்தும். சற்று பதற்ற இருக்கத்தான செய்யும். வார்த்தைகள் மூலம் பதற்றத்தை த்ணிக்க வேண்டிய நேரம் இது. சூழ்நிலையை உங்கள் இணை கையாளும்படி விட்டுக்கொடுங்கள். எதற்கும் வற்புறுத்தாமல் பழம் நழுவி பாலில் விழும் வரை வார்த்தைகளால் வசப்படுத்தலாம்.

தோழியின் கரத்தைப் பற்றும்போது, எதிர்வினையை கவனிக்க வேண்டும். பெண்ணுக்கு உங்கள்மேல் ஈர்ப்பு வந்து விட்டால், கைகளால் உங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு  வெளிப்படுத்தக்கூடும். முத்தத்திற்கு முந்தைய முக்கிய கட்டம் தோழியின் கண்களை நேராய் நோக்குவதுதான். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது போல இருவரும் ஒருவரையொருவர் கண்களுக்குள் நோக்கும் இந்த நேரமே ஒருவருக்கொருவர் அக்கறையை, உரிமையை காட்டும். 

முத்தமிட்டு விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல உதட்டுக்கு நேராக பாயக்கூடாது. முதலில் கரம் உள்ளிட்ட வேறு இடன்ங்களில் முத்தமிடலாம். இது ஆரம்ப கட்ட தயக்கத்தை தாண்டிச் செல்ல உதவும். முத்தமிட முக்கியமானது பறக்காமல் இருப்பதுதான். பதறிய காரியம் சிதறிப்போகும். மெதுவாக தோழியின் தலை அருகே நெருங்கி, அடுத்தக் கட்டத்திற்கு அவளையே வழிநடத்த விடலாம். முத்தத்திற்கு அவள் ஆயத்தமானதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

தேவதையின் இதழ்கள் மிருதுவானவை. முத்தமிடும்போது விறைப்பாக இருக்க வேண்டாம். உதடுகளை அழுத்தமாக அல்லாமல் மிருதுவாக ரோஜா இதழ்களில் பதிக்கலாம். இதழ்களை இறுக்கமாக மூடிக்கொள்ளவேண்டாம் இதழ்களை கடந்து செல்வது இன்பத்தின் பெருக்காக அமையக்கூடும். முதன்முறையாக முத்தமிடும்போது, உங்கள் கைகள் அவள் முதுகை சுற்றி அணைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது தோள்களை சுற்றி படர்ந்திருக்கலாம். இல்லையெனில், அவள் முகத்தை இருபக்கமும் ஏந்தி இருக்கலாம். இவை எல்லாமே முரட்டுத்தனமாக அல்லாமல மென்மையாகவே நடக்கவேண்டும்.