தற்காலத்தில் பெண்களை கவர் மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் பயனளிப்பதில்லை ஏனெனில் அல்வா பெண்களுக்கு முக்கியமும் அல்ல பெரும்பாலானவர்கல் மல்லிகைப் பூ வைப்பதும் இல்லை. 

காலை, மாலை விஷ்

ஒரு குட் மார்னிங், குட் நைட். இதில் என்ன இருக்கிறது கருதினாலும் தொடர்ந்து செய்து வந்தால் அது பெண்களை சிறப்பாக உணர்ச் செய்கிறதாம்

பாராட்டு

அனைவரும் எதிர்பார்ப்பது பாராட்டுதான். அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்ப்பது போல காதலன், கணவனுக்காக செய்யும் சிறு விஷயங்களுக்கும் பெண்கள் பாராட்டை எதிர்பார்க்கின்றனர். பாராட்டாவிட்டலும்  குறை கூறுவதை தவிர்க்கலாம்.

பரிசுகள்

வெறும் பாராட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல், மனைவி / காதலி உங்களுக்காக செய்த விஷயத்தை பாராட்டி பரிசும் கொடுத்தால் பின்ன காதல் மழைதான்

உண்மை

பெண்கள் தோண்டித்துறுவி கேள்வி கேட்பதற்கு காரணம் சந்தேகமோ, பொறாமையோ அல்ல. எல்லையற்ற காதல், அன்பு, அக்கறை, தவறாக ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சம். 

முகப்புப் படத்தின் முக்கியத்துவம்

பெண்கள் தங்கள் காதலர், கணவருடன் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைக்க விரும்புவார்கள். அவரும் அவ்வாறு வைக்கவேண்டும் என விரும்புவார்கள். தங்கள் படத்தை வைப்பதன் மூலம் வேறு பெண்கள் தங்கள் துணையுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். 

ஆச்சரியம்

பெண்களுக்கு பிடித்ததை எதிர்பாராத நேரத்தில் செய்து ஆச்சரியப்படுத்தினால் உங்களை விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள். படம், பிடித்த இடம்,  பிடித்த பொருள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


அதிர்ச்சி

பெண்கள் எதிர்பாராத நேரத்தில் நண்பர்கள், உறவினர்களை அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்துவது.  நீண்ட நாட்களாக வாங்க, காண காத்திருப்பவற்றை சாத்தியமாக்குவது

மன்னிப்பு

திருமணத்திற்கு முன் ஆயிரம் மன்னிப்பு கேட்டாலும் திருமணத்துக்கூப் பின் கவுரவக் குறைவாகிவிடும். தவறு தன் பக்கம் என்றால் தயங்காமல் மன்னிப்பு கேட்கலாம். சண்டைக்கு முற்றுப்பள்ளியும், காதலுக்கு தொடர்புள்ளியும் மன்னிப்புதான்.

புகைப்படம்

துணை தூங்கிக் கொண்டிருக்குபோது, சமையலின் போது, வேலைவிட்டு திரும்பும் போது, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்து அசத்தலாம்.