குறிக்கப்பட்டது 21 ஆம் தேதி..! இஸ்ரோ புது தகவல்..! 

நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காகவும்  மேலும் பல முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும் சந்திரயான்-2 கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் நிலவின் மேற்பரப்பில் கடந்த 7ம் தேதி லேண்டர் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி லேண்டர் நிலவில் தரை இறங்கவில்லை என்றாலும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவை சுற்றி வருகிறது. இதன் மூலம் 95% வெற்றி கிடைத்துள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.

இந்த நிலையில் லேண்டர் தரை இறங்கியதா என்பது குறித்து தீவிர ஆய்வில் இறங்கிய இஸ்ரோ, லேண்டர் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பது ஆர்பிட்டர்  மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆர்பிட்டர் உடனான தொடர்பை ஏற்படுத்த  இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் லேண்டரின் டிரான்ஸ்பார்மர்கள் வேகமாக தரையிறங்கில் சில பழுது ஏற்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.இதனால் சிக்னல் கிடைக்காமல் உள்ளது.

இது குறித்து இஸ்ரோ தெரிவிக்கும் போது... 

கடந்த 4 நாட்களாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையத்தில் உள்ள 32 மீட்டர் விட்டமுடைய சக்தி வாய்ந்த லேண்டர் மூலம் பல்வேறு சிக்னலை அனுப்பப்பட்டு தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். குறிப்பாக வரும் 21ஆம் தேதி வரை நிலவின் தென்துருவத்தில் பகல் வேளையாக இருக்கும் என்பதால் 21ம் தேதி வரை தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.