1 மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி ...! வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு புதிய அறிவிப்பு ..! 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவட்டவர்கள் அல்லது கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். 

கர்நாடகாவில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்பி எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என கர்நாடக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது .

கர்நாடகாவில் மட்டும் 80 பெருகும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மாற்று சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களை அவரவர் வீட்டில்  தனிமைப்படுத்தி இருங்கள் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது 

அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 10 பேர் வரை தப்பி சென்றனர். இதனையறிந்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு செலஃபி எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பவில்லை என்றால் அவர்களை  தேடி போலீசே வரும் என்றும் பின்னர் அவர்களை அரசின் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படும் என்றும் அம்மாநிலத்தின் மருத்துவ கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்