Asianet News TamilAsianet News Tamil

நீராவி குளியல் உடல் எடை குறைக்குமா? உண்மை என்ன..?

Steam Bath Reduce Weight : நீராவி குளியல் உடல் எடையை குறைக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா? இதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

is it true steam bath to reduce weight in tamil mks
Author
First Published Aug 30, 2024, 7:30 AM IST | Last Updated Aug 30, 2024, 7:30 AM IST

குளிர்காலத்தில் நீராவி குளியல் (steam bath) ரொம்பவே நல்லது. இந்த குளியல் பல சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. நீராவி குளியல் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் குணப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?அந்தவகையில், நீராவி குளியல் உடல் எடையை குறைக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா? இதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

தற்போது, மக்கள் மத்தியில் நீராவி குளியல் பிரபலமாகிவருகிறது. நீரின் வெப்பநிலை 160 டிகிரி பாரன்ஹீட்  (71 செல்டியஸ்) -க்கு மேல் உள்ள நீர் வெப்பநிலை எடை இழப்புக்கு உதவும். 

நீராவி குளியல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், எடையை குறைக்கிறது. நீராவி குளியல் ஒரு நபர் தன் இயல்பை விட அதிகளவு எடையை குறைக்க உதவலாம். அந்தவகையில், நீராவி குளியலின் பிற நன்மைகள் என்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: Health Tips : குளித்த உடனே தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..!!

நீராவி குளியலின் பிற நன்மைகள் : 

1. இதய செயல்பாடு அதிகரிக்கும் : 

நீங்கள் அதிக வெப்பநிலையில் குளித்தால், இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஏனெனில், இது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதுதவிர, இரத்த அழுத்த அளவை குறைக்கிறது. ஒருவேளை, உங்களுக்கு பிபி பிரச்சினை இருந்தால், நீராவி குளியல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

2. எடையை குறைக்கும் :

நீராவி குளியல் மூலம் நீங்கள் சுமார் 2-2.5 கிலோ எடையை குறைக்க வாய்ப்புள்ளது.  இந்த குளியல் மட்டுமின்றி பிற காரணிகளும் உடல் எடையை குறைக்க அவசியம்.   டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தும் உடலை பேண வேண்டும். நீராவி குளியல் தசைகளை ரிலாக்ஸாக வைக்கும். பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் படி, நீராவி குளியல் உடலுக்கு சில நன்மைகளை வழங்குகிறது என சொல்லபடுகிறது. ஆனால் உடல் எடையை குறைக்கும் என அறிவியல்ரீதியாக ஆதாரப்பூர்வமாக சான்றுகள் இல்லை. 

இதையும் படிங்க: உலகளவில் ட்ரெண்டாகி வரும் பீர் குளியல்., அப்படின்னா என்ன? இதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

3. நச்சு நீக்கியாக செயல்படுகிறது : 

வெந்நீரில் குளிக்கும் போது அதிகளவு வியர்வை வெளியேறுகிறது. இதன் காரணமாக, நச்சுப் பொருட்களில் இருந்து, நிவாரணம் கிடைக்கும். இது உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றே சொல்லலாம். 

4. தசைகளை சரி செய்கிறது : 

நீராவி குளியல் தசைகளை மீட்டெடுக்க பயன்படுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் இந்த குளியல் எடுத்துக் கொண்டால், தசைகளை நன்றாக செயல்பட வைக்கிறது. அதன் பிறகு, அது தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது.

5. சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது : 

நீங்கள் வேலை செய்யும் போது விரைவாக மூச்சிரைக்க ஆரம்பித்தால், உங்கள் சுவாசம் சீராக நீராவி குளியல் எடுங்கள். இந்த குளியல் உங்கள் சுவாச திறனை அதிகரிக்கும் மற்றும் சுவாச செயற்பாட்டை மேம்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios