குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை.. தந்தையின் இந்த பழக்கமே காரணம்..ஆய்வில் வந்த பகீர் தகவல்!!
Kids Health Care : வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தால் அது குழந்தையின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?
ஒரு பெண் தாய்மை அடைவது ஒரு அற்புதமான ஒரு விஷயமாகும். பொதுவாகவே, ஒரு பெண் கர்ப்பம் அடையும்போது அவளது உணவு பழக்க வழக்கங்கள், உடல் செயல்பாடுகள் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமானால் தாய் மட்டுமின்றி, தந்தைக்கும் பங்கு உண்டு தெரியுமா?
வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தால் என்ன.. இல்லை என்றால் என்ன.. என்பது பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா.. வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தால் அது குழந்தையின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒரு புதிய ஆராய்ச்சி சொல்லுகின்றது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. இது குறித்து விரிவாக இங்கு நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே, நாம் அனைவரும் வயிற்றில் இருக்கும் குழந்தை மற்றும் தாயின் மீது தான் அதிக கவனம் செலுத்துவோம். அந்த குழந்தைகளின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்தால் கூட அதைப்பற்றி நாம் யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
முக்கியமாக பெண்களை மையமாக வைத்தே, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்படும். ஆனால், உண்மையில் கருவை பாதிக்கும் பிரச்சினைகளைக் குறித்து ஒருபோதும் ஆண்கள் தரப்பில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால், கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை குறித்து தந்தையின் பங்கையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உடலியல் நிபுணர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ஐயோ! குடிக்காம இருக்க முடியல... அப்போ "இந்த" விஷயம் உங்கள் வாழ்க்கையில் வெறும் கனவு மட்டுமே.. எது தெரியுமா?
இதுகுறித்து நடத்திய ஆய்வில், தந்தைக்கு மதுப்பழக்கம் இருப்பதால், அது குழந்தைகளின் உடலுக்கும் சம்பந்தம் இருக்கு என்று தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தால் அவருக்கு பிறக்கும் அந்த குழந்தை பல்வேறு மோசமான உடல் பிரச்சினைகளை சந்திக்கும் என்று கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, 2021 ஆம் ஆண்டு சீனாவில் 5 இலட்சம் அதிகமான தம்பதிகளிடம் இந்த ஆய்வு செய்தபோது அதில் பெண் கற்பதற்பதற்கு முன் அவரது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு மேல் வாய்பிளவு, பிறவி இதய நோய், செரிமான மண்டலத்தில் கோளாறுகள் போன்ற பிற குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, வயிற்றில் குழந்தையை சுமக்கும் அந்தப் பெண் கர்ப்ப காலத்தில் மது அருந்தவில்லை என்றாலும், மாதிரியான பிரச்சினைகள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை தாக்குகின்றது. தந்தையின் இந்த குடிப்பழக்கம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் போன்றவற்றுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடலில் நிபுணர் ஒருவர் கூறுகையில், " ஒரு ஆணுக்கு நீண்ட காலம் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அது அவரது விந்தணுவில் உள்ள மரபு வழி ஆர்என்ஏக்-களின் விகிதத்தை பாதிக்கும். மேலும், தந்தை மது அருந்தினால் அது அவரின் குழந்தைக்கு ஏற்படும் ஏபிஜெனிடிக் தாக்கம் பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது என்றார்.
இதையும் படிங்க: 1 மாதம் மது குடிப்பதை நிறுத்தினால் உடலில் இந்த மாற்றங்கள் நடக்கும்..கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
அதுபோல, வயிற்றில் குழந்தை இருக்கும் போது அந்த பெண் மது அருந்தினால் அது அவளது குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதாவது, கர்ப்பிணிப் பெண் வாரம் ஒரு முறை மது அருந்தினால் கூட, அது வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை மற்றும் முக வடிவத்தை மோசமாக பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது தெரியுமா?
கர்ப்பிணி பெண் கர்ப்ப காலத்தில் மது அருந்தும் போது அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சாத்தியமான பிரச்சனைகளில் நரம்புியல் வளர்ச்சி குறைபாடுகள், முக அம்ச மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே, ஒரு குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எனில் அதில் ஆண் பெண் இருவது ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். இதற்கு இருவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D