குறைவான செலவில் துபாய் சுற்றுலா செல்ல இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி திட்டம் வகுத்துக் கொடுக்கிறது. ரூ.81,900 செலவில் ஜோடியாக பயணிக்க முடியும்.
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் மலிவு விலையில் பல சுற்றுலா திட்டங்களை வழங்கி வருகிறது. உள்நாட்டு சுற்றுலா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, வங்கதேசம் என வெளிநாடுகளுக்கும் குறைந்த செலவில் சென்றுவர வழிவகை செய்து கொடுக்கிறது.
அந்த வகையில் இப்போது துபாய் சுற்றுலாவுக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. Dazzling Dubai என்ற இத்திட்டத்தில் புர்ஜ் கலீஃபா, ஷேக் சயீத் கிராண்ட் மசூதி, ஃபெராரி வேர்ல்டு, தோவ் குரூஸ், பாலைவனம் ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
6 நாட்களுக்கான இந்த சுற்றுலா மார்ச் 23ஆம் தேதி டெல்லியில் தொடங்கும். மாலை 6 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 8.40 மணிக்கு துபாய் சென்றடையும். அங்கு 5 இரவுகள் துபாயில் தங்கி சுற்றிப் பார்க்கலாம். பின், இந்தியா திரும்புவதற்கான விமானம் மார்ச் 28ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு துபாயில் இருந்து கிளம்பி, மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு டெல்லியை அடையும்.
அண்டார்டிகாவில் உடைந்து மிதக்கும் ராட்சத பனிப்பாறை! லண்டன் நகரைவிட பெருசு!
இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து பயணம் செய்வதாக இருந்தால் தலா ரூ.81,900 கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சென்றுவர ரூ.99,000 கொடுக்க வேண்டும். ஒரு குழந்தையையும் உடன் அழைத்துச் செல்வதாக இருந்தால் அதற்கான தனி கட்டணம் ரூ.81,500. குழந்தைக்குத் தனியே படுக்கை வசதியும் செய்து தரப்படும். குழந்தைக்கு தனி படுக்கை வசதி தேவையில்லை என்று கருதினால் ரூ.70,500 மட்டும் கட்டணமாகப் பெறப்படும்.
துபாய் சென்று திரும்பு வருவதற்கான எகானமி விமான கட்டணம், துபாயில் தங்குவதற்கு 3 நட்சத்திர ஹோட்டல், உணவு, விசா கட்டணங்கள் முதலியவை இந்தத் தொகுப்பில் உள்ளடங்கி இருக்கின்றன. அதோடு துபாயில் சுற்றிப் பார்ப்பதற்கான போக்குவரத்து செலவு, வழிகாட்டிகள் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும். அனைத்து பயணிகளும் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இந்த துபாய் சுற்றலா திட்டத்தை பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தில் பார்வையிடலாம்.
Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்
