IRCTC Tour : குறைந்த விலையில் ஏசி ரயிலில் பயணம்.. ஐஆர்சிடிசியின் டூர் பேக்கேஜ் - முழு விபரம் இதோ !!
குறைந்த விலையில் ஏசியில் பயணம் செல்லும் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் பற்றி முழுமையாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
ஐஆர்சிடிசி பல இடங்களைப் பார்வையிடும் சுற்றுலா பயணங்களை அறிவித்து வருகிறது. நீங்கள் பயணம் செய்ய விரும்புபவர் என்றால், இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவ்வப்போது, ஐஆர்சிடிசி மூலம் பயணிக்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கிறது. குறைந்த செலவில் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் திட்டத்தை தான் பார்க்கப்போகிறோம்.
ஐஆர்சிடிசி கவுரவ்-புன்யா தீர்த்த யாத்ரா (SZBG08) என்ற டூர் பேக்கேஜ் திட்டத்தை அறிவித்தது. இந்த டூர் பேக்கேஜில் அயோத்தியா, ஹரித்வார், காசி, மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வர் போன்ற இடங்களைச் சுற்றிப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
டூர் பேக்கேஜ் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?
இந்த டூர் பேக்கேஜ் 12 பகல் மற்றும் 11 இரவுகள் கொண்டதாக இருக்கும். பயணிகள் 3ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். பயணத்தின் மூலம் புண்ணியத் தலங்களுக்குச் செல்வது மன அமைதியைத் தரும். இது 25.10.2023 முதல் தொடங்க உள்ளது. ஸ்டாண்டர்ட் வகுப்பிற்கு ரூ.24340 முதல் ரூ.22780 வரையிலும், கம்ஃபர்ட் வகுப்பிற்கு ரூ.36340 முதல் ரூ.34780 வரையிலும் பயணிகள் செலுத்த வேண்டும்.
எங்கெல்லாம் தெரியுமா?
மஹாகாலேஷ்வர் - உஜ்ஜைனி
ஓங்காரேஷ்வர்
ரிஷிகேஷில் உள்ள ராம் ஜூலா மற்றும் பிற கோயில்கள்
கங்கா ஆர்த்தி - ஹரித்வார்
காசி விஸ்வநாதர் கோவில், சாரநாத், விசாலாக்ஷி கோவில், கங்கா ஆரத்தி-வாரணாசி
அயோத்தியில் கோவில் வருகை
திரிவேணி சங்கம் - பிரயாக்ராஜ் ஆகிவை ஆகும்.
Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்