அழிந்து வரும் புலிகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களை பாதுகாக்க கோரி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 இல் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day) அனுசரிக்கப்படுகிறது. புலிகள் பாதுகாப்பு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டு இந்த நாளின் நோக்கமாகும். அந்த வகையில் இன்று சர்வதேச புலிகள் தினமாகும்.

சர்வதேச புலிகள் தினம் 2010 ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பர்க் புள்ளிகள் உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது. இந்த உச்சி மாநாட்டில் புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரசாங்கங்கள் 2020 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்தனர். அன்றிலிருந்து இன்று வரை அழிந்து வரும் புலிகளை பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

உலகிற்கு புலிகள் ஏன் முக்கியம்?

புலிகள் வெறும் அழகுக்கான விலங்கு அல்ல. அவை மற்ற விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம் இயற்கையின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. புலிகள் இல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்புகள் சமநிலையற்றதாகிவிடும். ஆரோக்கியமான பல்லுயிரிகளை உறுதி செய்கின்றன. அவற்றின் இருப்பு ஒரு செழிப்பான நன்கு நிர்வகிக்கப்பட்ட காடை குறிக்கிறது. இது காலநிலை நிலைத்தன்மை, நீர் பாதுகாப்பு மற்றும் கார்பன் சேமிப்புக்கு அவசியம். எனவே, புலிகள் உயிர் வாழ்வது ரொம்ப முக்கியம்.

புலிகள் குறித்த உண்மைகள்:

இயற்கையான உலகளாவிய நிதியத்தை குறிக்கும் WWF, புலிகள் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டுள்ளது :

- இந்தியா, வங்காளதேசம், தாய்லாந்து, சீன, ரஷ்யா உட்பட்ட 13 நாடுகளில் தான் புலிகள் வாழ்கின்றன.

- உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இந்தியாவில் தான் உள்ளன.

- புலிகள் பொதுவாக தங்கள் இரையை வேட்டையாடிய இடத்தில் சாப்பிடுவதில்லை மாறாக மறைவிடத்திற்கு இழுத்துச் சென்று சாப்பிடும்.

- துரதிஷ்டவசமாக கடந்த நூற்றாண்டில் புலிகளின் எண்ணிக்கை 95% குறைந்துள்ளது.

- 2023 இல் வெளியிடப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3167 புள்ளிகள் உள்ளன. உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை 75% மட்டுமே என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

குறைவதற்கான காரணங்கள் :

- விவசாயம் மற்றும் மேம்பாட்டுக்காக காடுகளை வெட்டுவதால், புலிகளின் வாழ்விடங்கள் குறைகிறது.

- மனித குடியிருப்புகள் விரிவடையும்போது புலிகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகிறது சில சமயங்களில் புலிகள் மற்றும் மனிதர்களுக்கிடையே மோதல்கள் வருகின்றன.

- சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் புலிகளின் வாழ்விடங்களை அச்சுறுத்துகின்றன.

நினைவில் கொள்

இந்த ஆண்டுக்கான சர்வதேச புலிகள் தினம் வெறும் நினைவஞ்சலி மட்டுமல்ல, பூமியின் நலனுக்காக புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது ரொம்பவே அவசியம். புலிகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதன் மூலம், பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், புலிகள் காடுகளில் தொடர்ந்து உமறுவதை உறுதி செய்வதில் அனைவரிடமும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.