இந்த பதிவில் நம்முடைய நாக்கை பற்றிய சில சுவாரசியமான மற்றும் அற்புதமான உண்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மனித உடலானது பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. நாக்கு உலகில் அனைத்து அற்புதமான நிகழ்வுகளை சுவைக்கவும், பேசவும் பயன்படுத்துகிறோம். நாக்கு இல்லையெனில் நம்மால் பேசவும், உணவின் சுவையை உணரவும் முடியாது. ஏன் மூச்சு விட கூட சிரமமாக இருக்கும். நோய்களின் அறிகுறி முதலில் நாக்கில் தான் தெரியும் நாக்கில் ஏதேனும் சிறிது மாற்றம் தெரிந்தால் கூட உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது. சரி, இப்போது நம் நாக்கை பற்றிய சில சுவாரசியமான மற்றும் அற்புதமான உண்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாக்கை பற்றிய சில உண்மைகள் :
1. நீளம்
நம்முடைய நாக்கானது தொண்டையில் இறுதிவரை இருக்கும். அதாவது ஆணிற்கு சராசரியாக 8.5 சென்டிமீட்டர் அளவும், பெண்ணிற்கு 7.9 சென்டிமீட்டர் வரையும் நாக்கு வளரும். ஆனால் தற்போது அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டாபெர்ல் என்பவரின் நாக்கு தான் உலக அளவில் நீளமான நாக்கு. 10.1 செமீ உடைய இவரது நாக்கானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2. சுவை மொட்டுகள்
சராசரியாக ஒரு நபரின் நாக்கில் 2000 முதல் 4000 சுவை மொட்டுக்கள் உள்ளன. அவை அனைத்தும் நாக்கு முழுவதும் உள்ளன. இந்த சுவை மொட்டுகள் தான் நாம் உணவின் சுவைகளை உணர்வதற்கு காரணமாகின்றன. மேலும் இந்த சுவை மொட்டுக்களில் உள்ள சுவையை உணரக்கூடிய செல்களானது ஒவ்வொரு வாரமும் அழிந்து மீண்டும் புதிய செல்களை உருவாக்கும். அதுபோல சிலருக்கு சுவை தெரிவதில்லை என்று சொல்வார்கள். காரணம் அவர்களது நாக்கில் சராசரியை விட குறைவான சுவை மொட்டுக்கள் தான் இருக்கும். இத்தகையவர்களால் கசப்பு சுவையை உணர முடியாது.
3. மாறுபட்ட சுவை உணர்வ
நம்முடைய நாக்கானது இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு மற்றும் காரம் போன்ற சுவைகளை உணர முடியும். நாக்கின் மையப்பகுதியை பார்க்கிலும் பக்கவாட்டின் பகுதி தான் அதிக உணர்ச்சி கொண்டது. முக்கியமாக நாக்கின் பின்புறம் தான் கசப்பு சுவை உணரப்படுகிறது.
4. ஓய்வு கிடையாது!
நம் நாக்கு எட்டு தசைகள் இணைந்த ஒரு தொகுப்பாகும். மனித உடலிலே சுயமாக செயல்படக்கூடியது நாக்கு தான். நாக்கால் இடைவெளியின்றி பேச, சாப்பிட முடியும். எனவே, உடலின் மற்ற தசைகளை காட்டிலும் நாக்கு தான் அதிக ஆற்றலுடன் இருக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் நாக்கு ஒருபோதும் சோர்வடையாது.
5. சுவை மொட்டுக்கள் நம் உயிரை காக்கும்:
நாக்கில் இருக்கும் சுவை மொட்டுகள் நமக்கு விதவிதமான சுவைகளை வழங்குவது மட்டுமல்ல, நாம் சாப்பிடும் உணவு பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை கண்டறிய பெரிதும் உதவுகிறது தெரியுமா? ஆம், சுவை மொட்டுக்கள் கெட்டுப்போன உணவின் சுவையே உணரும் போது உடனடியாக அதை விழுங்காமல் துப்பிவிடுமாறு நமக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும்.
6. ரேகை:
நம்முடைய கையில் இருக்கும் ரேகையை போல ஒவ்வொரு நபரின் நாக்கிலும் தனித்துவமான ரேகை இருக்கும். கைரேகையானது பாதுகாப்பிற்கு பயன்படுவது போல, நாக்கும் பாதுகாப்பிற்காக பயன்படுத்தலாம். இது அதிக பாதுகாப்பானது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றன.
7. ஆரோக்கியத்தை பற்றி சொல்லும்!
நம்முடைய நாக்கை வைத்து நம்முடைய ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அதாவது பிங்க் நிறத்தில் இருந்தால் ஆரோக்கியமானது என்று அர்த்தம். அதுவே அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் போலிக் அமிலம், வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றின் அறிகுறியை குறிக்கின்றது. அதுபோல நாக்கின் மேற்பகுதி வெள்ளையாக இருந்தால் லுகோபிலக்கியா, கருப்பாக இருந்தால் பேட்டரியை தொற்று வலிமிகுந்த கொப்பளங்களுடன் இருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
8. எடை ;
மனிதர்களைப் போல நாக்கின் எடையும் அதிகரிக்கும். நாக்கின் எடையானது இரண்டாக இருப்பதே ஆரோக்கியமான அறிகுறி. ஒருவேளை நாக்கில் கொழுப்பு அதிகரித்தால் தூங்கும் போது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் இதனால் சில சமயங்களில் உயிர் கூட போகலாம்.
