கொரோனா முக்கிய தகவல்..! "பள்ளிகளுக்கு அவசர அறிவிப்பு"..! 

இந்தியாவில் 29 பேருக்கு  வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்  நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் மும்முரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாநில அரசும் மத்திய அரசும் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கூட்டம் அதிகமுள்ள இடங்களில் போகக் கூடாது என்றும் மற்றவர்களிடம் பேசும்போது கைகுலுக்கி பேச வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக இரண்டு கைகளை கூப்பி வணக்கம் சொன்னாலே போதுமானது, யாரேனும் அருகில் தும்பினாலோ இரும்பினாலோ அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் மூன்று அடி தூரமாவது விலகி இருத்தல் மிகவும் நல்லது.

சவரன் விலை கேட்டு மயக்கம் அடையாதீங்க..! கிராமுக்கு உயர்வு தெரியுமா...?

வெளியில் செல்லும்போதோ அல்லது வீட்டில் இருக்கும்போது கைகுட்டையை எப்போதும் கையில் பயன்படுத்துவது மிகவும் நல்ல ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒரு வகையில் தற்போது பொது இடம் என எடுத்துக் கொண்டால் அந்த வரிசையில் பள்ளிகூடங்களும் சேரும். எனவே பள்ளி மாணவர்கள் கட்டாயம் கைகுட்டையை பயன்படுத்த வேண்டும் என்றும் யாரேனும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுப்பதே நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மீறி கட்டாயம் அடிக்கடி கை கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. எனவே இந்த விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் மத்தியில் மேற்குறிப்பிட்ட விஷயத்தை குறித்து புதிய வைத்து நல்ல முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.