உயர்வு கண்ட இந்தியய பங்குச்சந்தை..! லாபம் கண்ட நிறுவனங்கள்..! 

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குவர்த்தகம் சற்று உயர்வுடன் முடிந்து உள்ளது. அதன் படி தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிப்ஃடி 11979.65 (271.75 ) (+2.32%), சதவீதம் அதிகரித்து முடிவடைந்து உள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் SENSEX - 40789.38 ( 917.07) (+2.30%) சதவீதம் அதிகரித்து உள்ளது. 

இந்திய பங்குச்சந்தையில் பல பங்குகள் விலை குறைந்திருந்ததை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் வாங்கி குவித்தனர். முதலீட்டாளர்களின் வாங்கும் ஆர்வத்தால் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 2% வரை உயர்ந்துள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கண்ட நிறுவனங்கள்..! 

டைட் டன், இன்ப்பிராடெல், பஜாஜ்  பானான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல லாபம் கண்டன. 

சரிவை சந்தித்த நிறுவனங்கள்..! 

ஜீல், YES பேங்க், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட  நிறுவன பங்குகள் சரிவை கண்டன.