ஆண்களை விட பெண்கள் நீண்டகாலம் வாழும் மாநிலங்கள்.. தமிழ்நாடு லிஸ்டுல இருக்கா?
2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் இந்திய முதியோர் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில், ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். ஆம். 2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் இந்திய முதியோர் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், உத்தரகண்ட், கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் 60 வயதுடைய பெண்களின் ஆயுட்காலம் 20 வருடங்களுக்கும் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தற்போதைய வயதான மக்களின் சமூக-பொருளாதார நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. "60 ஆண்டுகள்" என்பது ஒரு நபரின் சராசரி ஆயுட்காலத்தை குறித்து. இது ஒட்டுமொத்த நல்வாழ்வின் குறிப்பிடத்தக்க குறிகாட்டியாகும். சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் 60 வயதில், ஒரு நபர் கூடுதலாக 18.3 ஆண்டுகள் வாழ எதிர்பார்க்கலாம். அதாவது பெண்களுக்கு 19 ஆண்டுகளும் ஆண்கள் 17.5 ஆண்டுகளும் கூடுதலாகா வாழலாம்.. அதாவது 60 வயதிற்குள் ஆண்களை விட பெண்கள் கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் வாழ முடியும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் முதியோர்களின் விகிதம் இரட்டிப்பாகும், மொத்த மக்கள்தொகையில் 20% ஐ எட்டும் என்று அந்த அறிக்கை மதிப்பிடுகிறது. தற்போது, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்கள் உலக மக்கள்தொகையில் 13.9% ஆக உள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 2.1 பில்லியனாக இருமடங்காக இருக்கும், இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 22% ஆக இருக்கும்.
தூங்கி எழுந்த உடனேயே கனவுகள் ஏன் மறந்துவிடுகின்றன.. இவை தான் முக்கிய காரணங்களாம்..!
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி (ஜூலை 1 ஆம் தேதி வரை), இந்தியாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 149 மில்லியன் மக்கள் உள்ளனர், இது நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 10.5% ஆகும். 2050 ஆம் ஆண்டில், முதியோர்களின் பங்கு 20.8% ஆக இருமடங்காக அதிகரிக்கும், அதாவது மொத்தம் 347 மில்லியன் மக்கள் உள்ளனர்.
இந்தியாவில் வயதான மக்கள்தொகையை நோக்கிய இந்த மக்கள்தொகை மாற்றம், வரவிருக்கும் தசாப்தங்களில் சுகாதாரம், சமூக நலன் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.. வளர்ந்து வரும் முதியோர் மக்களுடன் தொடர்புடைய தேவைகள் மற்றும் சவால்களுக்கு கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிடுவது முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.