இந்திய பெண்கள் குறித்து அதிர்ச்சி தகவல்..!  அப்போ.. இதுவரை நாம் நினைத்தது எல்லாம் வீணா போச்சே...!

இந்தியாவில் 48% பெண்கள் பாதியிலேயே அவர்களது வேலையை விட்டு விலகுவதாக ஓர் அதிர்ச்சி புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

என்ன தான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் நுழைந்து விட்டனர் என பெருமை பேசி வந்தாலும், உண்மையான விஷயம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலநிலையில் பெண்கள் அவர்களது வேலையில் ஈடுபடுவது மிகவும் சிரமமாகி விடுகிறது என்றே சொல்லலாம், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் அவதார் குழுமம் வியூபாயிண்ட் என்ற ஒரு நிறுவனம் சமீபத்தில் 783 பெண்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி 48 சதவீத இந்திய பெண்கள் பாதியிலேயே வேலையைவிட்டு விலகுவதாகவும், அதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர்களுடைய குடும்ப சூழ்நிலை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேப்போன்று 45 சதவீத பெண்கள் குழந்தையை கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், பணியை விட்டு விலகுவதாகவும், 36 சதவீத பெண்கள் பிரக்னன்சி நேரத்தை காரணம் காண்பித்து பணியில் இருந்து விலகுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தவிர குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் 23 சதவீத பெண்கள் பணியை விட்டு விலகுவதாகவும், இருப்பினும் தங்களது வீட்டில் இருந்தபடியே அவர்களுடைய பணியை மேம்படுத்திக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

அதன்படி பார்த்தால் 69 சதவீத பெண்கள் வேலையை விட்டாலும் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய திறனை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.