Asianet News TamilAsianet News Tamil

விட்டான் பாரு "ரெய்டு"..! நடிகர் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று தட்டித்தூக்கிய வருமானவரித்துறை..!

"தனி ஒருவன்", "அனேகன்" உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழுமம் சினிமா தயாரிப்பது, விநியோகம் செய்வது மட்டுமல்லாது, திரையரங்குகளையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு விஜய் - அட்லீ கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது.

income tax raide in actor vijays home and called for enquiry in neiveli shooting spot
Author
Chennai, First Published Feb 5, 2020, 4:35 PM IST

விட்டான் பாரு "ரெய்டு"..! நடிகர் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று தட்டித்தூக்கிய வருமானவரித்துறை..! 

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த வருமானவரித் துறையினர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அவருடைய காரிலேயே அங்கிருந்து அழித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

"தனி ஒருவன்", "அனேகன்" உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழுமம் சினிமா தயாரிப்பது, விநியோகம் செய்வது மட்டுமல்லாது, திரையரங்குகளையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு விஜய் - அட்லீ கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. 

விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும், 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியான. இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் போலி செய்தி என விஜய் ரசிகர்களை நக்கலடித்தனர். தல, தளபதி ஃபேன்ஸ்கள் டுவிட்டரில் கட்டிப்புரண்டது எல்லாம் நமக்கு தெரிந்த கதையே. அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீங்களா? 

income tax raide in actor vijays home and called for enquiry in neiveli shooting spot

பிகில் படத்தின் உண்மையான வசூல் என்ன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டுமென விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை தொல்லை செய்து வந்தனர். பொறுத்து, பொறுத்து பார்த்த அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிகில் படம் 100வது நாளை நெருங்கியதை கொண்டாடும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டார். அதில் பிகில் திரைப்படம் இதுவரை எந்த படமும் வசூல் செய்யாத அளவிற்கு 300 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறினார். 

இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம குஷியில் துள்ளி குதித்தனர். உலக அளவில் பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

income tax raide in actor vijays home and called for enquiry in neiveli shooting spot

ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபட்டதாக கூறி தியாகராய நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஐ.டி. அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். 

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வந்த தருணத்தில், நடிகர் விஜய்நடித்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போதே வருமான வருமானவரித்துறையினர்  அதிரடியாக நுழைந்து அவரை அழைத்து சென்றனர் 
 
Follow Us:
Download App:
  • android
  • ios