நன்கு படித்த திறமை  வாய்ந்த  நபர்களுக்கு  மட்டுமே  அதிக சம்பளத்தில்  வேலை கிடைகிறது . ஆனால்  சோம்பேறித்தனமாக  எந்த  வேலையும் செய்யாமல் 3  மாதங்களுக்கு  எப்பொழுதும் தூங்கிக்கொண்டே  இருக்கும் எண்ணம்  உடையவர்கள்  இந்த வாய்ப்பை  பயன் படுத்திக் கொள்ளலாம் . 

அதாவது,பிரான்ஸ்  நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மைக்ரோ கிராவிட்டி  தொடர்பான ஆராய்சிக்காக , 3  மாதங்கள் விஞ்ஞானிகள் சொல்லும்  இடத்திலேயே  உறங்க  வேண்டுமாம் .அவ்வாறு  தூங்கும் போது உடல் அசைவில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பார்கள்.

இதற்கு  விருப்பம்  உள்ளவர்கள் விண்ணபிக்க  சில  கண்டிஷன்  கூறப்பட்டுள்ளது . அதன்படி, 2௦ வயது  முதல் 45 வயது வரை இருக்க  வேண்டும் என்றும், மது மற்றும் புகை பழக்கம்  இருக்கக்கூடாது  என்றும்  கூறப் பட்டுள்ளது .

இதற்காக  தேர்வாகும்  நபருக்கு மூன்று மாத  சம்பளமாக 11.20 சம்பளமாக  வழங்கப்படும்  என  தெரிவித்துள்ளனர்

இதற்கு விண்ணபிக்க  உலகம் முழுவதும் பல  விண்ணப்பங்கள்  குவிந்த வண்ணம்   உள்ளது . இதற்கான  விவரத்தை டெலிகிராப் பத்திரிக்கை  செய்தி  வெளியிட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது .