தினமும் 15  நிமிடம் இதை செய்து வாங்க போதும்..! எந்த வலியும்  பறந்து போகும்..! 

நீண்ட நாட்களாக நரம்பு பிரச்சினையால் முதுகு வலி மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த முத்திரையை சிறிது நேரம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வலி முற்றிலும் நீங்கும்.

முதலில் ஒரு இடத்தில், இரண்டு கால்களையும் மடக்கி அமைதியாக  உட்கார வேண்டும். அதன் பின், கால் தொடையின் மீது நம்முடைய இரண்டு கைகளையும் வைத்து கீழ் குறிப்பிட்டவாறு முத்திரையை வைக்க வேண்டும்.

இடது கை 

கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்ற விரல்கள் சாதாரணமாக நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.


 
வலது கை  

கட்டைவிரலின் நுனியை சுண்டு விரல் மற்றும் நடுவிரலால் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொது நம் கழுத்து மற்றும் உடல் நேராக இருக்கும் படி அமர்ந்து செய்வது நல்லது.

இதை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் செய்து வந்தால் முதுகு வலி மற்றும் கழுத்து வலியிலிருந்து முழு நிவாரணம் பெறலாம்.