ஆடி வெள்ளி ஆடிப்பெருக்கு....!

ஆடிப்பெருக்கான இன்றைய தினத்தில் நம் வீட்டில் என்ன செய்தால்  செல்வம் அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம்.

ஆடி பெருக்கு என்றால் என்ன ..?

தென்மேற்கு மழையினால் ஆற்றங்கரையில் தண்ணீர் வர ஆரம்பிக்கும்.. அதனால் தான் இதனை, ஆடி பெருக்கு என்பார்கள்...

இன்றைய தினத்தில் விவசாயிகள் என்ன செய்வார்கள்...

ஆற்றங்கரை ஓரத்தில் நின்று வணங்குவார்கள்...

பிள்ளையாரை வழிப்படுவார்கள்

"தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்".. அதற்கேற்றவாறு தை பிறக்கும் போது வழி பிறக்க, ஆடிப்பெருக்கான இன்று தான் விதையை விதைக்க வேண்டும்...

ஆடிப்பெருக்கு ஆற்றங்கரை ஓரம் நின்று தண்ணீரை வணங்கி விட்டு, ஒரு வாழை இலையில், விளக்கு வைத்து விட்டு தண்ணீரில் விட்டு வணங்குவார்கள்

அதாவது எப்படி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறதோ, அதே போன்று விவசாயமும் பெருக்கெடுக்க வேண்டும் என ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்வார்கள்...

விவசாயம் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் செல்வம் கொழிக்க வாழ வேண்டும் என  விருப்பம் தெரிவிப்பார்கள்.

இன்றைய தினத்தில், பிள்ளையாரை பிடித்து வைத்து, அவருக்கு பிடித்த பல பொருட்களை வைத்து படைத்து விட்டு கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள்....

சரி, ஆற்றங்கரை பக்கம் இருப்பவர்கள் வணங்க செய்வார்கள்..ஆனால் வீட்டில் உள்ள நாங்கள் என்ன செய்வது என்ன கேட்கிறீர்களா...?

ஆடி பெருக்கு, ஆடி வெள்ளிக்கிழமை அன்றே வருவது மிகச்சிறப்பான நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாளில் இலையை விரித்து பிள்ளையாரை பிடித்து வைத்து, அவருக்கு பிடித்தமான அனைத்து பொருட்களையும் வைத்து வணங்குவார்கள்

குல தெய்வ மந்திரம்

ஓம் (குல தெய்வ பெயர் ) நம....என நம்மால் முடிந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்கி இன்றைய தினத்தில் குல தெய்வத்தை வழிப்பட்டால் வாழ்வில் செல்வம் கொழிக்கும

இன்றைய தினத்தில் படைத்த உணவு பொருட்களை காகம், மற்ற பறவைகள் என அனைத்திற்கும் வைத்துவிட்டு பின் நாம் உண்ண வேண்டும்

இவ்வாறு செய்து வந்தால், அடுத்த நான்கு மாதம் கழித்து பிறக்கக்கூடிய தை மாதம் பிறக்கும் போது வழி பிறக்கும். ஆடிபெருக்கை வைத்து தான், இன்று விதை விதைத்தால் தை மாதம் அறுவடைக்கு தயாராக இருப்போம் என்பதை தான் ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.