துளசி வழிபாட்டின் பலன்கள்....

துளசி என்றாலே எண்ணற்ற பலன்களை தரக்கூடியது நமக்கு தெரியும் தானே....

துளசி செடியை சுற்றி வணங்கி வருவது முதல்,எப்போதும் கோவிலுக்கு செல்லும் போது அங்கு துளசியை வழிப்பட்டு வருவது வரை நாம் செய்து வரும் நல்ல பழக்கங்களில் ஒன்று...

ஒவ்வொரு வீட்டிலும் துளசிச்செடி வளர்த்து  வந்தால்,ஆக சிறந்தது....

துளசியை வீட்டில் எங்கு வைத்து வளர்க்க வேண்டும் தெரியுமா.?

இரட்டை கிருஷ்ண துளசி செடியாகத்தான் வளர்க்க வேண்டும். துளசிச் செடியை வீட்டின் முன்புறத்திலோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டு்ம்.

வீட்டின் பின்புறம் வைப்பது தவறு.

தினமும் இறைவனை வணங்கி நீரைச் செடியின்மேல் தேவையான அளவு தெளிக்க வேண்டும்.

துளசி சகுனம் ஒப்பற்ற சகுனம், வெளியே செல்லும்போது துளசியை வணங்கிவிட்டுச் சென்றால், வேறு எந்தச் சகுணமூம் ஒன்றும் செய்யாது.

இதனை தான் நம் முன்னோர்கள் அன்று முதல் இன்று வரை பேணி காத்து, தற்போதும் வீட்டில் துளசி செடியை வளர்த்து வருகிறார்கள்...