தவறு செய்யாத ஒருவர் எவரேனும் இருப்பார்கள் என்றால், அதற்கான பதில் மௌனம் தான். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் சிறிய தவறுகளை செய்துக்கொண்டுத்தான் இருப்பார்கள்.நம்மில்  பலரும் தெரியாமல் சிறு சிறு தவறு செய்வது வழக்கம்.

தான் செய்த தவறை ஒப்புக்கொள்பவர்களும் வெகு சிலர்தான். ஆனால் மற்றொரு விதத்தில் தவறு  செய்பவரகள் பலர் இருக்கின்றனர்.அதாவது தெரிந்தே தவறு செய்வது,அந்த தவற்றால் மற்றவர்கள் எப்படி  சீரழிந்தாலும் பரவாயில்லை என  நினைப்பது. இது போன்ற  குணாதிசியங்களை கொண்டவர்கள்  அவர்கள் செய்த தவறை என்றுமே ஒப்புக்கொள்ள  மாட்டார்கள்

இவ்வாறு செய்யபப்டும் தவறுக்கு மன்னிப்பு கிடையாதாம்.அப்படிப்பட்ட தவறுகள் என்ன என்பதை  பார்க்கலாம்

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, வாழ  வழிவிடாமல் வாழ்கையே சீரழிப்பது

அடுத்தவரின் மனைவி அல்லது கணவரின் மீது ஆசைப்பட்டு, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி சீரழிப்பது

ஒன்றும் அறியாதவர்கள் மீது வீண்பழி சுமத்தி, சுயநலம் பேணுவது

கர்ப்பிணி பெண்ணை கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, அதேப்போன்று மாதவிலக்கின் போது மனம்  வருந்தும்படி வார்த்தையை பயன்படுத்துவது

தகாத எண்ணங்கள் வரும்படி ஒருவர் மனதை கெடுப்பது

பெண்களுக்கு எதிராக செய்யும் வன்முறைகள்

வயதானவர்களை கவனிக்காமல், அவர்களை மாரியாத இல்லாமல் பேசுவது

ஒருவருக்கு தானமாக கொடுத்த பொருளை திரும்பகேட்பது.

மேற்குறிப்பிட்ட இவை அனைத்திற்கும் மன்னிப்பு என்பதே கிடையாதாம்