if ladies having moolam star who supposed to have thosham
மூலம் நட்சத்திரம் இருந்தா யாருக்கு தோஷம்,என்ன நடக்கும் தெரியுமா ?
மூலம் நட்சத்திரம் என்றாலே திருமணம் நடைபெறுவதற்கு சில ஆண்டுகள் தள்ளிப்போகிறது என்பதை நம்மால் பார்க்க முடியும்.
காரணம் மூலம் நட்சத்திரம் இருந்தால், சில பல தோஷங்கள் இருப்பதாக சொல்லபடுவதும், அதனால் சில பாதிப்புகள் ஏற்படும் என்பதுமே....
மூலம் நட்சத்திரம்
மூலம் நட்சத்திரம் பொதுவாகவே,பெண்களின் ஜாதகத்திற்கு தான் பொருந்தும்.ஆண்களுக்கு இந்த தோஷம் கிடையாது என கூறப்படுகிறது.
அதாவது ஆணுக்கு மூலம் நட்சத்திரம்1,2,3 ஆம் பாதமானாலும்,மனைவியின் தகப்பனாரை பாதிக்காது என்பது ஐதீகம்
பெண்களுக்கு மூலம் நட்சத்திரம்
மூலம்- 1,2,3 பாதமானால் – மாமனாருக்கு தோஷம்
கேட்டை - 2,3,4 பாதமானால்- கணவரின் மூத்த சகோதரருக்கு தோஷம்
விசாகம் -4 ஆம் பாதமானால் – கணவரின் இளைய சகோதரருக்கு தோஷம்
ஆயில்யம்- 2,3,4 பாதமானால் – மாமியாருக்கு தோஷம்
எனவே, மூலம் நட்சத்திரம் கொண்டவர்களின் பாதத்தை அடிப்படையாக கொண்டு,யாருக்கு எந்த தோஷம் இருக்கிறது என்பது மட்டும் இல்லாமல்,அந்த தோஷத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்து திருமணத்தை விரைவில் செய்து முடிக்கலாம்
