idea new offer 1 gb per day
ஜியோ மட்டும் தான் சலுகைகளில் வாரி வாரி வழங்குமா நாங்களும் வழங்குவோம் என களத்தில் இறங்கி உள்ளது ஐடியா.
பிரபல ஐடியா செல்லுலார் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தங்களது சலுகைகளை அறிவித்து உள்ளது.
அதன்படி ஜியோவிற்கு போட்டியாக , ஐடியா நிறுவனம் ஒரு புதிய ஐடியாவை வகுத்துள்ளது. அதன்படி மாதாதிந்திர கட்டணமாக 3௦௦ ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா பயன்படுத்தும் சிறப்பு சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த சலுகை போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஜியோவின் இலவச சேவை முடிந்து, கட்டண சேவையை தொடங்க உள்ள நிலையில், ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் ஜியோவிற்கு இணையான டேட்டா வழங்கவும் , அதே வேளையில் ஜியோ 3௦3 ரூபாயில் டேட்டா சேவையை வழங்கினால், ஐடியா 3 ரூபாய் குறைத்து 3௦௦ ரூபாய்க்கு டேட்டா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
