I will not drive a bike without a helmet

கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து ”இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்" என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய காவல்துறையினர் அனைவரையும் வியக்க வைத்துள்ளனர். 

ஹெல்மெட் அணிவது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது போன்ற போக்குவரத்து விதிகளை போலீஸார் உட்பட அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் போட்டுக்கொள்ள வேண்டும், ஒரிஜினல் லைசென்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட போக்குவரத்து விதிககளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தமிழக போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் சில போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் இருந்து எப்படி பணத்தை கரப்பது என்பதிலேயே குறியாகவும் உள்ளனர். 

இதனால் பெரும்பாலும் போக்குவரத்து போலீசார்களை வஞ்சியே வாகன ஓட்டிகள் சாலையை கடக்க பலக்கப்படுத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் வைத்திருந்தும் அணியாமல் வந்ததிற்காக 100 ஃபைன் போட்டதோடு பால் வண்டியில் வரும் போது ஹெல்மெட் அணியவில்லை என பில்லும் கொடுத்த கதை தமிழ்நாடு சென்னையில் அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து ”இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்" என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி திருப்பி அனுப்பிய காவல்துறையினர் அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.