கொரோனாவுக்கு "ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின் மருந்து" பரிந்துரை..! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி! 

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரை செய்து உள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர குழு.

அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளே ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு ஆஸ்திரேலியா அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த ஒரு நிலையில் அமெரிக்காவிலும் ஒரு சில ஆன்டிபயாடிக் மருந்துகளை தற்போது பயன்படுத்தி வருவதாக நேற்று முன்தினம் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்த ஒரு நிலையில் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு "ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின்"
மருந்தினைப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர குழு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த மருந்தை மலேரியா நோய்க்கான மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த மருந்தை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். அதே வேளையில் இந்த மருந்தை பரிந்துரை மட்டுமே  செய்யப்பட்டு உள்ளதே தவிர இதுதான் தடுப்பு  மருந்து என தெரிவிக்கவில்லை. எனவே தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை  பயன்படுத்தும் போது சற்று நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.