Asianet News TamilAsianet News Tamil

ICU-வில் கணவன் மனைவி..! உயிருக்கு போராடும் திக் திக் நிமிடத்தில் - அன்பு வார்த்தை..! வாழ்ந்ததற்கான அர்த்தம்..!

இந்த நிலையில் சீனாவில் மட்டும் தற்போது கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 தாண்டி உள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த ஒரு நிலையில் உலகம் முழுவதுமே நாட்டு மக்கள் கரோனா வைரஸ் குறித்து ஒரு விதமான பீதி அடைந்து உள்ளனர்.
 

husband and wife sharing their love and affection in icu while taking treatment in china
Author
Chennai, First Published Feb 6, 2020, 1:09 PM IST

ICU வில் கணவன் மனைவி..! உயிருக்கு போராடும் திக் திக் நிமிடத்தில் - அன்பு வார்த்தை..! வாழ்ந்ததற்கான அர்த்தம்..

உலகம் முழுவதும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் மட்டும் தற்போது கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 தாண்டி உள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வரும் தருணத்தில் உலகம் முழுவதுமே மக்கள் கரோனா வைரஸ் குறித்து ஒரு விதமான பீதி அடைந்து உள்ளனர்.

இந்த ஒரு நிலையில் அனைவரின் மனதை உருக்கும் வண்ணமாக ஓர் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் தீவிர சிகிச்சை பிரிவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க கணவன்- மனைவி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்போது அழுதபடியே ஒருவருக்கொருவர் கையை பிடித்துக் கொண்டு கனத்த இதயத்துடன் சில அன்பு வார்த்தைகளை பகிர்ந்து கொள்கின்றனர். 

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் ... ஒருவருக்கொருவர் அன்பை காட்டும் நிகழ்வு...காண்போரை கண் கலங்க வைக்கிறது. மேலும் மனைவி மூச்சு விட கூட  முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். அப்போது அவரது கையை பிடித்து அனைத்து கண் கலங்க பேசும் விதம் பார்ப்போரை அழ வைக்கிறது. எப்படியும் இவர்கள் நலம் பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios