மழைக்காலத்தில் உங்கள் வீட்டிற்குள் பூரான் வராமல் இருக்க ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக வீட்டிற்குள் நிறைய பூச்சிகள் வரும். குறிப்பாக, தேள், பூரான் போன்ற பூச்சிகள் தான். இந்த விஷப்பூச்சிகள் பொதுவாக வீட்டின் கதவு இடுக்குகள், சமையலறை ஷெல்ஃப், வீட்டில் ஈரத்தன்மை அதிகம் உள்ள இடங்கள், வாஷ்பேஷன் குழாய் மற்றும் அதன் இடுக்குகள், பாத்ரூமில் ஈரமான பகுதியில், இருட்டான இடங்கள் மற்றும் வீட்டில் அதிகமாக பயன்படுத்தாத இடங்கள் ஆகிய இடங்களில் தான் இவை அதிகமாக வரும்.

இந்த பூச்சிகள் விஷத்தன்மையுடையது என்பதால், இவற்றை வீட்டிற்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்காக நீங்கள் அதிக பணம் செலவழித்து ஸ்பிரே வாங்கி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. வெறும் ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் மட்டும் போதும். பூரான் வீட்டுக்குள் வருவதை சுலபமாக தடுத்து விடலாம். அதை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு ரூபாய் ஷாம்புவை பயன்படுத்துவது எப்படி?

இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு வருஷம் பாக்கெட்டை சேர்த்து நன்றாக கலக்கவும் அவ்வளவுதான் ஊரானை விரட்டுவதற்கான ஸ்பிரே ரெடி. இப்போது இந்த ஸ்ப்ரேவை உங்களது வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்கள், பாத்ரூம் தண்ணீர் குழாயின் அடிப்பகுதி இடுக்குகள் போன்ற இடங்களில் ஸ்பிரே செய்ய வேண்டும். மேலும் கிச்சனில் உள்ள வாஷ்பேஷன் குழாய் ஓட்டை, குழாயின் அடிப்பகுதி, ஷெல்ப் போன்ற மூலை முடுக்குகளில் ஸ்பிரே அடித்து விடுங்கள்.

ஷாம்பு எப்படி வேலை செய்யும்?

பூரானை விரட்ட ஷாம்பு எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில், ஷாம்புவில் இருக்கும் சில வகையான ரசாயனங்கள் பூரான் மேல் ஓடு மற்றும் தோல் பகுதியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் அதன் சுவாசம் மண்டலமும் பாதிக்கப்படும். இதனால் பூரான் மயக்கமடையும் அல்லது மூச்சு முட்டி இறந்து கூட போகும். ஆக மொத்தத்தில் ஷாம்புவின் வாசனை அடித்த உடனே பூரான் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் அங்கிருந்து ஓடிவிடும்.

அவ்வளவுதாங்க மழைக்காலத்தில் இனி பூரான் போன்ற பூச்சி தொல்லையால் நீங்கள் கஷ்டப்படத் தேவையில்லை. இந்த ஒரு ஸ்பிரே தயாரிச்சு பூரானை விரட்டி அடிங்க..!