அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா.. தயிர் மட்டும் போதும்.. வெறும் 5 நிமிடங்களில் மாறும் அதிசயம்
அக்குளில் காணப்படும் கருமையை நீக்க சில எளிய டிப்ஸ் இதோ...
நம் சருமம் அதிக உணர்திறன் கொண்டது. அதிலும் அக்குள் தோல் ரொம்பவே சென்சிடிவ். அங்கு வளரும் முடிகளை சிலர், ஷேவிங் ரேஸர்கள், வேக்சிங், ஹேர் ரிமூவல் க்ரீம்கள் வைத்து சுத்தம் செய்கின்றனர். அப்படி முடியை அகற்றி பிறகு பார்த்தால் நம் சரும நிறம் கருப்பாகவே இருக்கும். இதற்கு என்ன காரணம்? அக்குள் கருமையை எப்படி போக்கலாம் என்பதை காணலாம்.
வாக்சிங் செய்வதால் கருமை..?
அக்குளில் கருமை வர வாக்சிங் மட்டும் காரணம் கிடையாது. அக்குளில் சிலர் ரோல் ஆன் (Roll on) மாதிரியான டியோடரன்ட் தடவுகிறார்கள். இப்படி வாசனைக்காக தடவப்படும் டியோடரன், வாசனை திரவியங்கள் தான் அக்குள் கருமையை உண்டாக்குகின்றன. இதை சில வீட்டு பொருள்களை கொண்டு நீக்கலாம்.
தயிர் டிப்ஸ்
பேக்கிங் சோடாவும், தயிரும் பயன்படுத்தி அக்குள் கருமையை நீக்கலாம். பேக்கிங் சோடா ஒரு எக்ஸ்ஃபோலியேட்டர் போல இயங்குகிறது. தயிர் இயல்பாகவே சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. பேக்கிங் சோடாவுடன், சுத்தமான தயிரை கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதை அக்குளில் பூசி விடவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தில் இருமுறை செய்யலாம்.
ஆப்பிள் டிப்ஸ்
ஆப்பிள் வினிகரில் அமினோ அமிலம், லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. இதில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவும். இது சருமத்தையும் சுத்தப்படுத்த வல்லது. குறிப்பாக சருமத் துளைகளை கூட திறக்கிறது. சில துளிகள் ஆப்பிள் வினிகரை எடுத்து அக்குளில் பூசினால் போதும். இது முழுமையாக காய்ந்த பிறகு கழுவிவிடுங்கள். அக்குள் கருமை நீங்கும்.
இதையும் படிங்க: வேலியில் கிடக்கும் சங்குப்பூ அள்ளி தரும் நன்மைகள் தெரியுமா?
கற்றாழை டிப்ஸ்
கற்றாழை இயற்கையான சன்ஸ்கிரீன் போல பயன்படுத்தப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்தை பாதுகாக்கும். இவை சருமத்தை சுத்தம் செய்து, வீக்கத்தைக் குறைக்கவும் செய்கிறது. அக்குள் கருமை நீங்க, வீட்டில் உள்ள கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுங்கள். அதனை அக்குளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிடுங்கள். இதை ஒரு மாதம் தடவி வந்தால் எப்பேர்ப்பட்ட கருமையும் மறையும்.
உருளைக்கிழங்கு சாறு டிப்ஸ்
உருளைக்கிழங்கு சாறு அக்குள்களை நன்கு வெண்மையாக செய்கிறது. உருளைக்கிழங்கு சாறுடன், வெள்ளரிக்காய் சாறு கலந்து கொள்ளலாம். வெள்ளரிக்காயில் சுத்தம் செய்யும் தன்மை உள்ளது. இரண்டையும் ஒன்றாக கலந்து அக்குள் மீது தடவி மசாஜ் செய்துவிடுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
அரிசி மாவுடன் தேன்..
அரிசி மாவு இறந்த செல்களை நீக்குகிறது. அதுமட்டுமின்றி சருமத்தை வெண்மையாக்கும். தேனில் இயற்கையாகவே கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இவை நம்முடைய சருமத்திற்கு நல்லதும் கூட. இவை இரண்டையும் கலந்து அக்குளில் பூசி கொஞ்ச நேரம் உலர விட்டு கழுவ வேண்டும். நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: ஜப்பானியர்கள் சமைக்காத பச்சை இறைச்சியை விரும்பி சாப்பிட.. இப்படி ஒரு காரணம் இருக்கா?