ஜப்பானியர்கள் சமைக்காத பச்சை இறைச்சியை விரும்பி சாப்பிட.. இப்படி ஒரு காரணம் இருக்கா?
ஜப்பானியர்கள் இறைச்சியை சமைக்காமல் உண்பது ஏன் என்பதை இங்கு காணலாம்.
பெரும்பாலான ஜப்பானிய உணவு வகைகளில் சமைக்கப்படாத மாமிசம் அல்லது மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு காரணம் என்னவென நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அது எப்படி அவர்களால் சமைக்காமல் இறைச்சியை சாப்பிட முடிகிறது. அவர்களுடைய கலாசாரத்தின்படி சுவையான உணவுகளை எப்போதும் புதிய பொருள்களால் தான் சமைக்கின்றனர். சிக்கன் போன்ற இறைச்சிக்கும் மீன்களுக்கும் இது பொருந்தும். அதை இங்கு விவரமாக காணலாம்.
இந்த அசைவ உணவுகள் மீது சுவையூட்டும் மசாலாப் பொருட்கள், மூலிகைகள், சோயா சாஸ், வசாபி போன்ற சாஸ்கள் ஊற்றப்படுகின்றன. நாம் பாக்டீரியாவை அகற்றி இறைச்சியை உண்ண அதனை வேக வைக்கிறோம். ஆனால் ஜப்பானியர்கள் நோய்க்கிருமிகளைத் தடுக்க உதவும் நல்ல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உணவு பொருட்களை அதனுடன் சேர்த்து கொள்கின்றனர்.
நம்மை போல உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்காமல் புதியதாக அப்படியே உட்கொள்வதால், அதில் சேர்க்கும் மசாலாப் பொருள்கள் சுவையை கூட்டும். அதில் பச்சை வாசனை வராமல் இருக்க மசாலா பொருள்கள் நன்கு தூவப்படுகின்றன. ஜப்பானிய உணவு வகைகள் ஆரோக்கியமான ஆசிய உணவு வகைகளில் ஒன்றாகும். ஆனால் இவர்களின் அசைவ உணவு பழக்கம் உலகம் முழுவதிலும் உள்ள மற்ற சமையல் கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்டது. ஆனால் அவர்கள் ஏன் சமைக்காத இறைச்சி அல்லது மீன் சாப்பிடுகிறார்கள், அது பாதுகாப்பானதா?
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தினமும் துளசி சாறு.. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க துளசியை இப்படி யூஸ் பண்ணனும்..
பச்சையான மீன் அல்லது இறைச்சியை நன்கு கழுவி, சுத்தம் செய்து, சரியான மசாலா பொருட்களுடன் அதை கலந்து சாப்பிடுவது நல்லதாகும். சில வழிகளில் பச்சை மீனை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. உணவை சமைக்கும்போது அதனுடைய சத்துக்கால் உடைய வாய்ப்புள்ளது. அதாவது வறுத்த இறைச்சி அல்லது மீனில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகளை உடைப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கலாம்.
இறைச்சி, மீன்களை சமைப்பது அல்லது வறுப்பதும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும், இது பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதனால் ஜப்பானியர்கள் அவற்றை சமைக்காமல் அப்படியே உண்ணுகின்றனர்.
ஜப்பானிய உணவுகள் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவர்களின் உணவுத் தயாரிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களை பலமுறை சுத்தம் செய்தல் மற்றும் கழுவுதல் போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம்.
இதையும் படிங்க: வேலியில் கிடக்கும் சங்குப்பூ அள்ளி தரும் நன்மைகள் தெரியுமா?