குழந்தையின் தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

How to Remove Small Objects Stuck in Your Child's Mouth : பொதுவாக பிறந்த குழந்தைகள் உலகை அறிந்து கொள்வதில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். 5 மாதம் ஆன பிறகு குழந்தைகள் பார்க்கும் பொருட்களை தொடுவது, கடிப்பது, வாயில் போட்டுக் கொள்வது போன்ற விஷயங்களை செய்வார்கள். பொருட்களை வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் குழந்தைகளிடம் இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால் நாணயங்கள், பட்டன்கள் போன்ற சிறிய பொருட்களை வாயில் வைப்பது அவர்களுக்கு ஆபத்தானது. ஏனெனில் அது அவர்களது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. குழந்தைகள் ஏதேனும் வாயில் போட்டு அது சிக்கிக் கொண்டால், அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் என்ன செய்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகள் ஏதேனும் விழுங்கி விட்டால் என்ன செய்ய வேண்டும்?

- நாணயம், பட்டன் போன்ற சிறிய பொருட்களை குழந்தைகள் விழுங்கினால் அவர்களது மூச்சுக்குழாய் அல்லது உணவு குழாய்க்குள் சென்று விடும். சில சமயங்களில் தொண்டையில் கூட சிக்கிக் கொள்ளும். முதுகில் சுமார் 5 முதல் 10 முறை பலமாக தட்டுங்கள்.

- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தையாக இருந்தால் உங்களது கையிலோ அல்லது தொடையிலோ படுக்க வைத்து தலையை தாழ்வாக தாழ்த்தி, முதுகில் ஐந்து முறை தட்டுங்கள்.

- வேண்டுமானால் குழந்தையின் வயிறு மற்றும் மார்பின் மீது அழுத்திப் பார்க்கலாம்.

- குழந்தை மூச்சு விடை சிரமமாக இருந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

முக்கிய குறிப்பு :

  • குழந்தை ஏதேனும் விழுந்து விட்டால் வாயில் கைவிட்டு பொருளை எடுக்க முயலாதீர்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் மற்றும் சாப்பிட கொடுப்பது போன்ற முயற்சிகள் செய்வது தவறு. இல்லையெனில் பாதிப்பு தீவிரமாகலாம்.
  • சிறிய பொருட்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொள்வது போலவே உணவும் சில சமயங்களில் குழந்தையின் மூச்சுக்குழல் அல்லது உணவுக்குழாயில் சிக்கிக் கொள்ளும். இதனால் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவார்கள்.
  • குழந்தையின் உணவு மற்றும் மூச்சுக்குழலில் சிக்கியிருக்கும் பொருட்களை வெளியேற்ற, அவர்களின் வயதிற்கு ஏற்ப வழங்கப்படும் சிகிச்சையை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.